For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய அரசியல் சாசனம்... இந்தியா தலையிட த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தல்

அண்மையில் கொழும்பு சென்ற இந்திய வெளியுறவுத் துறை செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் திடீரென அதிகரிக்கும் இந்தியாவின் அதிகாரம்?- வீடியோ

    கொழும்பு: இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே அண்மையில் 2 நாட்கள் பயணமாக கொழும்பு சென்றார். இந்த பயணத்தின் போது மத்தல சர்வதேச விமான நிலைய மேம்பாடு, மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து இலங்கை அரசு தரப்புடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    TNA leaders meet Indian foreign secretary

    மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் விஜய் கேசவ் கோகலே சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, இனப்பிரச்சனைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனத்தை இலங்கை அரசு இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்ய வேண்டும்; இதன் மூலமாக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவும் வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது, இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக விஜய் கேசவ் கோகலே கூறினார்.

    இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங்க் உடன் இருந்தனர்.

    English summary
    Tamil National Alliance leaders met Indian foreign secretary Vijay Gokhale and urged to solve Tamils issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X