For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி நான் சொல்றதைதான் கேட்கணும்.. போலீசுக்கு உத்தரவிட்ட ரணில்.. இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம்

இலங்கையில் அரசு அதிகாரிகள், போலீஸ் எல்லோரும் இனி தான் சொல்லும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் அரசு அதிகாரிகள், போலீஸ் எல்லோரும் இனி தான் சொல்லும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே சார்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ரபேல் ஒப்பந்தம்.. விமானத்தின் உண்மையான விலை என்ன? உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! ரபேல் ஒப்பந்தம்.. விமானத்தின் உண்மையான விலை என்ன? உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!

ஆட்சி கவிழ்ந்தது

ஆட்சி கவிழ்ந்தது

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ரணில் விக்ரமசிங்கே இன்னும் மீண்டும் முறைப்படி பிரதமராக பதவி ஏற்கவில்லை. அதேபோல் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை முறையாக துறக்கவில்லை, அவர் இன்னும் பிரதமர் அலுவலகத்தில்தான் உள்ளார். மேலும் சிறிசேனவும் இதுகுறித்து முறையாக எந்த அறிவிப்பும் வெளியிடாத காரணத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தன்னை பின்பற்ற வேண்டும்

அங்கு யாருக்கு இப்போது பிரதமருக்கான அதிகாரம் உள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே டிவிட் செய்துள்ளார். அதில், கடந்த அக்டோபர் 26ம் தேதிக்கு முன்பு இருந்த அரசுதான் இனி தொடரும் என்பதை தெரிவிக்கிறேன். அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் போலீஸ்கள் இனி முன்னாள் அரசிடம் இருந்து எந்த விதமான உத்தரவுகளையும் முறையின்றி பெற கூடாது. அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டனர்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யார் சொல்வதை கேட்பது

யார் சொல்வதை கேட்பது

இதனால் அங்கு யாருடைய பேச்சை கேட்பது என்று அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். யார் பிரதமர், யார் சொல்லும் கட்டளைகளை பின்பற்றுவது என்று குழம்பி இருக்கிறார்கள். அதேபோல் இப்போது எந்த துறைக்கு யார் அமைச்சர் என்ற குழப்பமும் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Turmoil in Srilanka goes too far: Ranil orders police and officials to follow his orders only hereafter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X