For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரணில் கட்சியினருடன் சிறிசேனா திடீர் பேச்சுவார்த்தை.. இலங்கையில் புது குழப்பம்!

இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார்

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இதையடுத்து நம்பிக்கையில்லை தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் ராஜபக்சே மூன்று முறை தோல்வி அடைந்தார்.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

இதையடுத்து ராஜபக்சேவும், ரணிலும் மாற்றி மாற்றி தங்களை பிரதமர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதனால் இலங்கையில் பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. யார் பிரதமர் என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இந்த நிலையில் நேற்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நபருக்கே பிரதமர் பதவி என்று குறிப்பிட்டார். அதன்படி வரும் 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றம் கூடும், அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பெரிய தீர்வு

பெரிய தீர்வு

மேலும் இதில் ராஜபக்சேவிற்கு எதிராக முறைப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்கும் என்றும் அவர் கூறினார். இந்த முடிவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதராவான முடிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பட்டதாக வெளியான அறிவிப்பும் இன்று வாபஸ் பெறப்பட்ட உள்ளது.

திடீர் ஆலோசனை

திடீர் ஆலோசனை

இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

English summary
Turmoil in Srilanka: Sirisena holds an important meeting with Ranil supporting MP's.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X