For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐக்கிய நாடுகள் சபையில் புகார் அளித்த தமிழ் பெண்களுக்கு மிரட்டல்.. பாதுகாப்பு வழங்க கோரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் மாயமான தங்களது பிள்ளைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் புகார் தெரிவித்து விட்டு நாடு திரும்ப கூடிய தமிழ் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ட்ரான்ஷேசனல் கவர்ன்மென்ட் ஆப் தமிழ் ஈழம் (TGTE) அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் தலைவருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியுள்ளதாவது:

UN urged to Ensure the Safety of Tamil Mothers after they Return to Sri Lanka: TGTE

தற்போதைய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின்போது இலங்கையைச் சேர்ந்த ஆறு பெண்கள் தங்களது மகன்கள் மாயமாகியுள்ளது குறித்து புகார் அளித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் மாயமாகியுள்ள நிலைகள் இந்த ஆறு பேரும் துணிச்சலாக வந்து புகாரை பதிவு செய்துள்ளனர். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தில் இந்த ஆறு பெண்களும் நான் பங்கேற்று தங்களது குடும்பத்தினர் காணாமல் போனது குறித்து அதுமட்டுமல்லாமல் 18 ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் மாயமாகியுள்ளது குறைக்கும் தங்களது புகார்களை பதிவு செய்தனர்.

ஆனால் இவ்வாறு அவர்கள் புகார்களை பதிவு செய்த போது இலங்கை பாதுகாப்புப் படை, உளவுத்துறை, இலங்கை ராணுவ அதிகாரிகள் அவர்களை இடைமறித்து அவர்களை குறுக்கீடு செய்தனர்.

மிரட்டும் வகையிலும் பேசினர். இதனால் அந்த தாய்மார்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பயத்தின் காரணமாக மயங்கி சாய்ந்த ஒரு பெண்மணி ஜெனிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் கவுன்சில் நடக்கும் கட்டிடத்திற்கு கூட இலங்கை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்ந்து வந்து அவர்களை மிரட்டியுள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே இவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் மேற்கொண்டும் காணாமல் போன தங்களது உறவினர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர்கள் இலங்கை அதிபரையும் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஒன்பது ஆண்டுகள் கடந்தும் கூட இன்னும் அவர்களின் நேசத்துக்குரிய நபர்கள் திரும்பி வரவே இல்லை இலங்கைக்கு இந்தப் பெண்கள் திரும்பும் போது அவர்களுக்கு இலங்கை ராணுவம் அல்லது உளவுத்துறை தொல்லைகள் தராமல் பாதுகாக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் கடமையாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை வற்புறுத்த வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
UN urged to Ensure the Safety of Tamil Mothers of the Disappeared after they Return to Sri Lanka from UNHRC, says TGTE
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X