For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூடிய அறைக்குள் வயதானவர்கள் எடுத்த மோசமான முடிவு.. இலங்கை அரசு மீது ஐ.நா. தூதர் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

கொழும்பு: மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர் என்று இலங்கை அதிபருக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் இளைஞர் விவகார பிரதிநிதி ஜெயத்மா விக்கிரமநாயகே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஜெயத்மா, ஐ.நா. பொதுச் செயலாளரின் இளைஞர் விவகார பிரதிநிதியாக இருப்பவர். இவர் இலங்கை நிலவரம் குறித்து கவலை தெரிவித்து டிவீட் போட்டுள்ளார்.

UN Youth envoy condemns Sri Lankan Politicians

அந்த டிவீட்டில் ஜெயத்மா கூறியிருப்பதாவது:

ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. அரசியலமைப்பும், ஜனநாயக விழுமியங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. சில வயதான நபர்கள் மூடிய அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை முடிவு செய்து வருகிறார்கள்.

[இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப் படுகொலை- ஸ்டாலின்]

இலங்கை அரசியல்வாதிகளுக்கு எனது கோரிக்கை ஒன்றுதான். நாட்டின் ஜனநாயகத்தை மதித்து காப்பாற்றுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்க முயற்சியுங்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அதை சீர் செய்ய முயலுங்கள் என்று ஜெயத்மா கூறியுள்ளார்.

English summary
UN Youth envoy Jayathma Wickramanayake has condemned the Sri Lankan Politicians for the crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X