For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

By Siva
Google Oneindia Tamil News

United States seeks probe into Sri Lankan war crimes
கொழும்பு: இறுதி கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் அந்நாட்டு ராணுவம் 40,000 தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்று குவித்தது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியும் இலங்கை அதை ஏற்கவில்லை. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்கும் மனித உரிமைகள் குழு சபையில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே. ராப் இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்து போர்க்குற்றங்கள் நடந்த இடங்களுக்கு சென்று அதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலமும் வாங்கியுள்ளார்.

இதையடுத்து போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான மற்றும் நன்பகத்தன்மையான முறையில் விசாரணை நடத்துமாறு அமெரிக்கா இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

English summary
The US pressed Sri Lanka to probe alleged rights abuses by its army through independent and credible investigations after a top American diplomat recorded eyewitness accounts of serious "abuses" during the final stages of the civil war with the LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X