For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுத்த அமெரிக்கா: திடுக்கிடும் சாட்சியம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பிரீமன்: இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தில் தற்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

மக்கள் தீர்ப்பாயத்தில் திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் "வானவில்" என்ற அர்த்தத்தைக் கொண்ட தேதுன்ன சிங்கள செய்திதாளின் ஆசிரியர் ரோஹித்த பாஷன சாட்சியம் அளித்தார்.

USA trained Lankan Army in the final war - Evidence at Peoples Tribunal

அப்போது, இலங்கையின் இறுதிப்போரின் போது அமெரிக்காவின் தொடர்பு இருந்ததாக குற்றம் சுமத்தினார். இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம், இலங்கை ராணுவத்தினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் ரோகித்த பாஷன சுட்டிக்காட்டினார்.

மக்கள் தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று சர்வதேச மனித உரிமை தினத்தன்று தீர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த தீர்ப்பை 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்க உள்ளது.

English summary
Editor of the LTTE run newspaper Dedhunna “Rainbow” , Rohitha Bashana appeared before the tribunal and went on to say, US played close relationship with Lankan government during the final perhaps of war. Lankan and US troops engaged in the joint military training, he alleged
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X