• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட முடியாமல் மூச்சுவிட முடியாமல் அவதிப்படும் சிறுவன் டேனிஷ்...நிதி உதவி செய்யுங்கள்

சென்னை: சரியாக சாப்பிட முடியாமல், மூச்சு விட முடியாமல் கொடுமையான குறைபாட்டால் அவதிப்படும் சிறுவன் டேனிஷின் சிகிச்சைக்கு உதவுங்கள்!

மூன்றரை வயதே ஆன இளம் சிறுவன் டேனிஷ் சந்தோசமாக ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில், டேனிஷுக்கு உடலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. டேனிஷால் மற்ற குழந்தைகள் போல சரியாக பேச முடியாது, அதேபோல் சரியாக சாப்பிடவும் முடியாது.

Support Danish Low Jaw recover Treatment

டேனிஷ் குழந்தையாக இருக்கும் போதே Treacher Collins Syndrome என்று அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் டேனிஷ் முகத்தில் இருக்கும் எலும்புகள் மற்றும் திசுக்கள் சில சரியாக வளர்ச்சி அடையவில்லை. கீழ் தாடை சரியாக டேனிஷுக்கு வளர்ச்சி அடையவில்லை. இதன் காரணமாக அவரால் சரியாக பேச முடியாத, சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Support Danish Low Jaw recover Treatment

பால் குடிக்கும் வயதில் கூட டேனிஷுக்கு சரியாக பால் குடிக்க முடியாத பிரச்சனை இருந்தது. தண்ணீர் குடித்தால் கூட அது மூக்கில் இருந்து வெளியேறும் பாதிப்புகள் இவருக்கு ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மருத்துவர்கள் டேனிஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஒரு மாத குழந்தையாக இருக்கும் போதே இவருக்கு சோதனை செய்யப்பட்டது.

Support Danish Low Jaw recover Treatment

இந்த சோதனையின் முடிவில் டேனிஷுக்கு 2 வயது இருக்கும் போது கீழ் தாடை ஆப்ரேஷன் செய்ய வேண்டும், அது வரை திரவ உணவுகளே கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதோடு உடலில் உணவை செலுத்துவதற்காக சிறிய பைப் ஒன்றும்பொருத்தப்பட்டது. ஆனால் இந்த பைப் காரணமாக சரியாக சுவாசிக்க முடியாமல் டேனிஷ் சிரமப்பட்டு வருகிறார்.

Support Danish Low Jaw recover Treatment

சமயங்களில் திரவ உணவுகள் உணவு பைப்பில் செல்லாமல், மூச்சு விடும் பைப்பில் சென்று கடும் இருமல் டேனிஷுக்கு ஏற்பட்டுள்ளது. டேனிஷ் படும் கஷ்டங்களை என்னால் எளிதில் சொல்லிவிட முடியாது. அவர் மூச்சு விட கஷ்டப்படும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அவனால் சரியாக கத்தி அழ கூட முடியாது, என்று அவரின் அப்பா ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

டேனிஷ் 7 மாதம் இருக்கும் போது, அவரால் சரியாக சாப்பிட, மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து Tracheostomy surgery செய்யப்பட்டு டேனிஷ் காப்பாற்றப்பட்டார். கழுத்தில் சிறிய துளை போடப்பட்டு, மூச்சு விடும் வகையில் டியூப் பொருத்தப்பட்டது. இந்த சர்ஜரிக்கு டேனிஷ் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. டேனிஷ் அம்மா செல்வி தனது அனைத்து நகைகையும் விற்று செலவு செய்தார்.

இந்த நிலையில் தற்போது டேனிஷை காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்க்கு உடனே அவசர ஆபரேஷன் மேற்கொள்ள வேண்டும், கீழ் தாடையை சரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்கு மொத்தமாக 12 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் டேனிஷை பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை.

Support Danish Low Jaw recover Treatment

அதோடு கடந்த 10 மாதமாக லாக்டவுன் காரணமாக அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் உள்ளது. அதோடு ஒவ்வொரு வாரமும் Tracheostomy டேனிஷ் கழுத்தில் உரசி அங்கு காயத்தையும் ரத்த போக்கையும் ஏற்படுத்தி வருகிறது. உடனே ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே டேனிஷை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

Support Danish Low Jaw recover Treatment

டேனிஷ் அப்பா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம். இதில் மாதம் 2 இரண்டு முறை Tracheostomy tubeயை மாற்றவே 8000 ரூபாய் வரை மாதம் செலவாகிறது. இது போக மருத்துவ செலவுகள் நிறைய ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு இதுவரை கடந்த ஒரு வருடமாக 3.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. மொத்தம் 12 லட்சம் ரூபாய் தேவை. அதோடு மாத மாதம் மருத்துவ செலவிற்காக 7 ஆயிரம் ரூபாய் தேவை.

நீங்கள் உதவி செய்தால் மட்டுமே டேனிஷுக்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் மனது வைத்தால் இவருக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே டேனிஷுக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X