ஓவர்நைட்டில் ஆச்சரியம்.. 7.4 கோடி ரூபாய் பரிசு பெற்ற இளம்பெண்.. அடித்தது அதிர்ஷ்டம்.. என்ன நடந்தது?
சிட்னி: ஒரே நாளில் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் 25 பெண் ஒருவர்.. என்ன காரணம்?
உலகம் முழுக்க தொற்று பீடித்துள்ளதால், அவைகளை ஒழிக்க பல்வேறு முனைப்புகள் காட்டப்பட்டு வருகின்றன.. லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கொரோனா தொற்று வைரஸுக்கான சிகிச்சையையும், மருத்துவத்தையும் கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.
எனினும் இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளுக்கு ஒரே ஆறுதலாகவும், தடுப்பு மருந்தாகவும் இருந்து வருகிறது.. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி.. அமெரிக்காவிடம் அனுமதி கேட்கும் கோவாக்சின்

2வது அலை
அதேசமயம், 2வது அலைபரவல் ஏற்பட்டும், ஏராளமான உயிரிழப்புகளை சந்தித்தும் ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வராத நிலையில், அந்தந்த நாடுகளின் சார்பில் ஏராளமான விழிப்புணர்கள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அரசு சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது..

அமெரிக்கா
அதேபோல தடுப்பூசி செலுத்தி கொண்டால், பல்வேறு சிறப்பு பரிசுகளையும், ஊக்க பரிசுகளையும் வழங்குகிறோம் என்றும் அரசுகள் அறிவித்து வருகின்றன. அமெரிக்காவில் சம்பளம், போனஸ், சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. அதேபோல ஆஸ்திரேலிய நாட்டிலும் சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. 2 தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2 தடுப்பூசிகள்
அதன்படி, கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்களுக்கு, "தி மில்லியன் டாலர் வேக்ஸ் அலையன்ஸ்" என்ற பெயரில் ஒரு லாட்டரி போட்டி நடைபெற்றது. இதில் தடுப்பூசி செலுத்திகொண்ட மக்கள் அனைவருமே பங்கேற்றனர்... இதில் வெற்றி பெரும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது... அதன்படி அந்த போட்டியின் முடிவில், வெற்றியாளராக ஜோயன் ஸூ என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.. 25 வயதாகிறது அவருக்கு.

முதல் பரிசு
இந்திய மதிப்பில் அந்த பரிசின் மதிப்பானது சுமார் 7.4 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.. இவருக்கு பரிசாக வழங்கப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களும், நன்கொடையும், கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் மூலம் வழங்கப்பட்டவையாகும்.. இந்த போட்டியையடுத்து, கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஆஸ்திரேலிய மக்களிடம் பெருகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூரிப்பு
இதை பற்றி ஸூ சொல்லும்போது, "நியூ இயர் வரப்போகிறது.. அப்போது இந்த லாட்டரி பணத்தை வைத்து, சீனாவில் இருக்கும் என்னுடைய குடும்பத்தை முதல் வகுப்பில் ஃபிளைட்டில் அழைத்து செல்ல போகிறேன்.. ஒரு ஸ்டார் ஹோட்டலில் என் குடும்பத்தினரை தங்க வைக்க போறேன்.. அதற்குள் சீனாவில் இருந்து சர்வதேச விமான பயணத்திற்கான தடை விலகிவிடும் என்று நினைக்கிறேன்.. இந்த பணத்தில் ஒரு பகுதியை மட்டும் என் குடும்பத்திற்கு செலவு செய்துவிட்டு, மீதி பணத்தை ஒரு நல்ல முதலீட்டில் செலுத்த உள்ளேன்... அப்போதான் மேலும் பணம் லாபமாய் கிடைக்கும்" என்கிறார் பூரிப்புடன்.