சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை

Google Oneindia Tamil News

சிட்னி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாமன்யு பெத்துராஜூ ஆஸ்திரேலியாவின் மிக உயரமான கொஸ்கியூஸ்கோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான்.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கிளிமன்ஜாரோ சிகரம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரமுள்ள இந்த சிகரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏறிய சாமன்யு பெத்துராஜூ இந்தியக் கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்தான். அப்போது, அவனுடன் அவனது தயார் லாவண்யா, 3 பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர் உடன் சென்றிருந்தனர்.

8 yr old Samanyu Pothuraju Climbed Mount Kosciuszko in Australia

இந்த சாதனையின் போது, தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் பவன் கல்யாணை சந்திக்க விரும்புவதாகவும். மலையேற்றத்தில் உலக சாதனை படைத்தால் பவன் கல்யாணை சந்திக்க அழைத்து செல்வதாக என் தாய் கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தில் சாதனை படைக்க உள்ளதாக சாமன்யு தெரிவித்தான்.

இந்தநிலையில், ஆஸ்திரேலியாவின் மிக உயரமான கொஸ்கியூஸ்கோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான். தனது தாய், சகோதரி உட்பட 5 பேருடன் உடன் சென்ற சிறுவன் சாமன்யு பெத்துராஜூ, அடுத்ததாக ஜப்பானில் உள்ள பூஜி மலையில் ஏற உள்ளதாக கூறியுள்ளான். இதுவரை நான்கு மலை சிகரங்களில் ஏறி உள்ளேன், எதிர்காலத்தில் விமானியாக ஆசைப்படுவதாக சாதனை சிறுவன் சாமன்யு பெத்துராஜூ விருப்பம் தெரிவித்தான்.

English summary
8 yr old Samanyu Pothuraju Climbed Mount Kosciuszko in Australia. I have climbed 4 Mountains & now gearing up for Mt. Fuji in Japan. I want to be a pilot in future says 8 yr old Samanyu Pothuraju
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X