ஒரு "ஹலோவிற்கு" பின்னுள்ள உருக்கமான கதை.. 62 வயது நபரின் ட்விட்டால் உணர்ச்சியில் டெக் உலகம்.. ஏன்?
சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிலிப் ஓ கீஃப் என்ற நபர் செய்த "ஹலோ வேர்ல்ட்" என்ற ட்விட்டால் டெக் உலகமே உற்சாகத்தில் இருக்கிறது. காரணம் இந்த ட்விட்டிற்கு பின் மிகப்பெரிய பின்னணி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிலிப் ஓ கீஃப். கடந்த 2015ல் ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாகவும், உடலில் இருந்த சில நரம்பு குறைபாடுகள் காரணமாகவும் இவருக்கு amyotrophic lateral sclerosis (ALS) பாதிப்பு ஏற்பட்டது.
தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு அரக்கோணத்தில் நடந்த கொள்ளை.. 4 பேர் கைது! பரபர தகவல்கள்
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் இதே ஏஎல்எஸ் வகை வாதம் காரணமாகவே பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது வாழ் நாள் முழுக்க கண்களின் அசைவு மற்றும் மூளை அதிர்வலைகள்கள் மூலமே நவீன கணினி உதவியோடு தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ்
அவர் நினைப்பதை அவரின் சூப்பர் கம்ப்யூட்டர் எழுத்துக்களாக மாற்றி வெளியே தெரிவிக்கும். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிலிப் ஓ கீஃப் இதே வகையிலான குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் உடலில் எந்த ஒரு உறுப்பையும் அவரால் அசைக்க முடியவில்லை. கால்களில் மட்டும் லேசான அசைவு உள்ளது. வாயை கூட அவரால் பேசுவதற்காக அசைக்க முடியாது.

மோசமான நிலை
நாக்கை சுழற்ற முடியாது. இதனால் அவர் கடந்த 7 வருடமாக யாரிடமும் பேச முடியாமல் தவித்து வந்தார். அதிலும் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் எப்படியாவது, ஏதாவது பேச வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார். ஆனால் அவரால் உடலின் எந்த உறுப்புகளையும் நகர்த்த முடியாது என்பதால் கடுமையாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Hello, world ட்விட்
இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன் பிலிப் ஓ கீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் 'Hello, world' என்ற ட்விட்டை முதல் முறையாக செய்தார். என்ன.. உடலில் எந்த உறுப்பையும் நகர்த்த முடியாத நபர் எப்படி ட்விட் செய்தார் என்று கேட்கிறீர்களா? ஆம் இவர் போனை எடுக்காமல்.. எதுவும் பேசாமல்.. மூளையில் நினைத்தே 'Hello, world' என்று ட்விட் செய்துள்ளார்.

எப்படி ட்விட் செய்தார்
இவரின் மூளையில் பேப்பர் கிளிப் அளவில் சிறிய மைக்ரோ சிப் சில நாட்களுக்கு முன் பொருத்தப்பட்டது. இந்த சிப் மூலம் இவர் நினைக்கும் விஷயங்களை அப்படியே எழுத்துக்களாக எழுத முடியும். இதன் மூலம் இவர் தனது மூளையில் நினைத்தே "hello, world! Short tweet. Monumental progress" என்று ட்விட் செய்துள்ளார். இவர் முதலில் மனதில் பெரிதாக எழுத வேண்டும் என்று நினைத்து பின்னர் அதை சிறியதாக மாற்ற வேண்டும் என்று நினைத்துள்ளார்.

மூளையால் ட்விட் செய்தார்
அதன்படியே இவர் நினைத்தது போலவே '"hello, world! Short tweet. Monumental progress" என்று கடைசியாக ட்விட் செய்துள்ளார். இந்த ட்விட்டை செய்ய காரணம் Synchron என்று கலிபோர்னியா நிறுவனம் ஆகும். Synchron நிறுவனத்தின் சிஇஓ தாமஸ் என்பவரின் கணக்கில் இருந்து பிலிப் இந்த ட்விட்டை செய்துள்ளார். இந்த நிறுவனம்தான் அவருக்கான சிறப்பு மைக்ரோசிப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசிப்
உலகத்தில் ஏஎல்எஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒருவர் நேரடியாக மைக்ரோசிப் மூலம் செய்த முதல் ட்விட் ஆகும். இவரின் மூளையில் இருக்கும் மைக்ரோசிப்பின் பெயர் Stentrode brain-computer interface ஆகும். இவரின் இந்த ட்விட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. டெக் உலகில் இந்த ட்விட் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.