சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்!

உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சிட்னி: உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.

திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள்.

ஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன.

200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்

சிட்னி போட்டோகிராபர்

சிட்னி போட்டோகிராபர்

தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.

அதிசயம்

அதிசயம்

"எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம்

ராட்சச நீலத்திமிங்கலம்

ராட்சச நீலத்திமிங்கலம்

நிகழ்ந்தது. எனக்கு முன்னாள் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30 அடி இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்", என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

3வது முறை

3வது முறை

சீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மலைப்பு

மலைப்பு

இத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.

English summary
A Sydney-based photographer, named Sean, while watching humpback whales never expected that “one of the great wonders of the magical ocean” will appear in front of him. What he saw is a blue whale, the largest living animal in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X