சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு!

Google Oneindia Tamil News

சிட்னி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... அதைவிட அரிது என்று பிறப்பு குறித்தும் மானுடம் பற்றியும் அவ்வை மூதாட்டி அருளிய இந்த வாக்கு.. இன்றும் பேசப்படும் விஷயங்களில் ஒன்று.

எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறந்தவர்களுக்கே கூட சாதனை என்பது அவ்வளவு சாமானியமாக கிடைக்காத பொழுது.. தன் உடல் குறைபாட்டை வென்ற ஒருவர் இன்றைய உலகளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார். இங்கல்ல... கங்காருகளின் நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னியில்...

ரசல் ஓ கிரேடி... வயது 48, மேற்கு சிட்னியில் உள்ள நார்த் மெட் பகுதியின் இன்றைய ஹீரோ இவர்தான். டவுன் சின்ட்ரோம் எனப்படும் மரபணுவில் ஏற்படும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். 1986ம் ஆண்டு சிட்னியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 18.

32 ஆண்டுகளாக ஒரே நிறுவனம்

32 ஆண்டுகளாக ஒரே நிறுவனம்

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக அதே வேலையில் பணியாற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்றுள்ளார் ரசல். சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட குறைபாட்டால் பல்வேறு அவமானங்களை சந்தித்தவர். பள்ளி செல்லும் காலத்தில் சுற்றியிருப்பவர்களின் கேலி, கிண்டல்களால் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்தவர்.

குறையை ஒதுக்கி ஊழியரானார்

குறையை ஒதுக்கி ஊழியரானார்

ஒரு கட்டத்தில் தமது குறைபாட்டை அனைவர் முன்னிலையிலும் ஒத்துக் கொண்ட ரசல் பின்னாளில் அதனை புறந்தள்ளினார். ஒரு கட்டத்தில் சுய உழைப்பால் முன்னேற்றத்தை சந்தித்து, சாதிக்க வேண்டும் என்ற அவாவிலும், உந்துதலிலும் அங்குள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஊழியராக மாறினார்.

இரட்டிப்பு மகிழ்ச்சி

இரட்டிப்பு மகிழ்ச்சி

காலங்கள் உருண்டோடின. இன்றோ அவருக்கு வயது 50.. 32 வருடம் அதே நிறுவனத்தில் பணியாற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்றார் ரசல். அவரை விட, அவரது தந்தை ஜெவ் ஓ கிரேடிக்கு இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தமது மகன் சந்தித்த அவமானகரமான நிகழ்வுகளை முன்வைத்து பேசிய அவர், மகனின் இந்த உயர்வான நிலைமை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்.

அருமையான தருணம்

அருமையான தருணம்

தாம் வசித்து வரும் பகுதியில் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் நபராகவும் அவர் உள்ளார் என்றும் தெரிவிக்கிறார். தமது பகுதியில் தம்மையும், தமது மகனையும் காணும் மக்கள் கைகுலுக்கி பாராட்டுவதையும் கூறி சிலாக்கிறார் ஜெவ். ரசல் பணிபுரியும் உணவக நிர்வாகமும், சக ஊழியர்களும் ரசலை கொண்டாடுகின்றனர். அவருடன் பணிபுரிவது என்பது ஓர் அற்புதமான அருமையான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பழகுவதில் இனிமை

பழகுவதில் இனிமை

பழக இனிமையான... அதே நேரத்தில் அன்பை பொழியும் நபர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். உணவகத்தை சுத்தமாக வைத்திருப்பது, மேசை, நாற்காலிகளை ஒழுங்காக அடுக்கி வைப்பது என தமது பணியில் சிறந்து விளங்கியதாக அவர்கள் கூறியுள்ளனர். உண்மையான அர்ப்பணிப்பு, விடா முயற்சி, மன உறுதி.. ஆகிய இந்த மூன்றும் உலகின் எந்த குறையையும் துடைத்து விடும் என்பதற்கு லேட்டஸ்ட் வரவுதான்... ரசல்.

English summary
McDonald’s worker with Down’s syndrome retired after 32 years in the job, near Sydney, Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X