சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துறை தொடங்கி அந்நாட்டு அரசின் பல அமைப்புகள் வரை மாபெரும் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துறை தொடங்கி அந்நாட்டு அரசின் பல அமைப்புகள் வரை மாபெரும் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

Recommended Video

    Australia மீது நிகழ்த்தப்பட்ட Cyber தாக்குதல்... என்ன நடந்தது?

    உலகம் முழுக்க தற்போது நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சீனா - இந்தியா மோதல், சீனா- அமெரிக்கா மோதல், சீனா - ஆஸ்திரேலியா மோதல் என்று வரிசையாக நிறைய மோதல்கள் நடந்து வருகிறது.

    ராணுவ ரீதியான, வர்த்தக ரீதியான தாக்குதல்கள் ஒரு பக்கம் இருக்கும் போது, இன்னொரு பக்கம் சைபர் தாக்குதல்களும் நடந்து வருகிறது. உலகம் முழுக்க பல நாடுகள் ஹேக்கிங் மூலம் தங்கள் எதிரி நாடுகள் மீது சைபர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

    மொத்தம் 300 பொருட்கள்.. அதிரடியாக இறக்குமதி வரி உயர்வு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா மொத்தம் 300 பொருட்கள்.. அதிரடியாக இறக்குமதி வரி உயர்வு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா

    தாக்குதல் என்ன?

    தாக்குதல் என்ன?

    இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துறை தொடங்கி அந்நாட்டு அரசின் பல அமைப்புகள்வரை மாபெரும் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஸ்காட் மோரிசான் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஆஸ்திரேலியா சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஹேக்கிங் தாக்குதல்கள் நமது நாடு மீது குறி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    குறி யாருக்கு

    குறி யாருக்கு

    பெரும்பாலும் அரசு நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது. அரசின் அனைத்து மட்டங்களிலும் தாக்குதல்கள் நடந்து இருக்கிறது. பல பாதுகாப்பு துறை, நிதித்துறை தொடங்கி அனைத்திலும் தாக்குதல் நடந்துள்ளது . பள்ளிகள், மருத்துவத்துறை போன்ற சில தனியார் அமைப்புகளிலும் மோசமாக ஹேக்கிங் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவை இந்த தொடர் தாக்குதல்கள் உலுக்கி உள்ளது .

    எப்போதில் இருந்து

    எப்போதில் இருந்து

    இந்த தாக்குதல்கள் பல நாட்களாக நடக்கிறது. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிரத்தன்மை அதிகரித்துள்ளது. அதனால் பாதிப்பும் அதிகம் ஆகியுள்ளது. இந்த தாக்குதலால் எத்தனை சேதங்கள் ஏற்பட்டது என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறோம். முதல் கட்டமாக குறைவாக சேதம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறோம். முழுமையான விவரங்களை விரைவில் தெரிவிப்போம் என்று, ஸ்காட் தெரிவித்து உள்ளார் .

    யார் தாக்கியது

    யார் தாக்கியது

    ஆனால் இந்த ஹேக்கிங் தாக்குதல்களை யார் செய்தது என்று அவர் விளக்கவில்லை. இதை செய்தது யார் என்று எங்களால் இப்போது கூற முடியாது. ஆனால் ஒரு பெரிய ஆள்தான் இந்த தாக்குதலை செய்து இருக்கிறார்கள். ஒரு பெரிய நிர்வாக அமைப்புதான் இந்த தாக்குதலை செய்து உள்ளனர். நீண்ட நாட்களாக திட்டமிட்டு, ஆஸ்திரேலியாவை குறி வைத்து இப்படி தாக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

    பெரும் சந்தேகம்

    பெரும் சந்தேகம்

    இதற்கு அவர் காரணமும் தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு ஹேக்கிங் தாக்குதலை வைத்து, அது எப்படி செய்யப்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியும். யார் பின்னால் இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியும். இந்த ஹேக்கிங் தாக்குதல்கள் திட்டமிட்டு, மேம்பட்ட முறையில் செய்யப்பட்டு உள்ளது. இவ்வளவு பெரிய தாக்குதலை செய்ய நிறைய பலம் வேண்டும். பெரிய அமைப்பு அல்லது குழு இதை செய்துள்ளது என்று நான் கூற இதுதான் காரணம் என்று ஸ்காட் கூறியுள்ளார்.

    சீனா மீது பார்வை

    சீனா மீது பார்வை

    இந்த சைபர் தாக்குதல்கள் காரணமாக சீனாவின் மீது எல்லோரின் கவனமும் திரும்பி இருக்கிறது. ஒருவேளை சீனா இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அண்டை நாடுகள் மீது சீனாதான் அதிகமாக சைபர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. ஆஸ்திரேலியா - சீனா இடையே பல நாட்களாக சண்டை இருக்கிறது. தென் சீன கடல் எல்லை தொடங்கி வர்த்தக போர் வரை பல விஷயங்களில் இரண்டு நாட்டிற்கும் மோதல் இருக்கிறது.

    திடீரென புகார்

    திடீரென புகார்

    இதன் காரணமாக சீனாவின் ஹேக்கர்கள்தான் ஆஸ்திரேலியா மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஸ்காட் தனது பேட்டியில், பல நாட்களாக இந்த ஹேக்கிங் நடக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் அதை இப்போதுதான் அவர் தெரிவித்து உள்ளார். சீனாவுடன் சண்டை இருக்கும் போதுதான் அவர் இதை பற்றி பேசி உள்ளார். இதனால் அவர் சீனாவைத்தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்கிறார்கள்.

    English summary
    Australia hits by state-level Cyber Attack in a sophisticated way says, PM Scott in press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X