சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே கட்டுப்பாடுகளற்ற விமான பயணம் இன்று தொடங்கியது!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேமற்றும் நியூசிலாந்து இடையே பயண கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து ஓராண்டுக்கு மேலாக கட்டுப்பாட்டிலிருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்து ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். தங்கள் உறவினர்களை சந்தித்ததால் ஒருவரையொருவர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இதனால் அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தின. சாலை, கப்பல், விமானப் போக்குவரத்துகள் முடங்கின.

Australia opens travel bubble with NZL

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே விமானத்தில் வரும் வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இருக்காது என்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆன்ட்ரேன் தெரிவித்திருந்தார்

இதையடுத்து வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளில் எந்த பகுதிக்கும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்றைய தினம் 19-ஆம் தேதி என்பதால் இன்று முதல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி விமான பயணம் தொடங்கியது. கிட்டதட்ட ஓராண்டுக்கு மேலான இது போன்ற கட்டுப்பாடுகளற்ற பயணம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இரு நாடுகளுக்கிடையே ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர். இந்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இது போன்ற பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

"அதை" கொஞ்சம் தள்ளி போடுங்க.. இப்போதைக்கு வேணாமே.. விழிபிதுங்கும் அரசு.. இளைஞர்களுக்கு அட்வைஸ்

நியூசிலாந்திலிருந்து ஆஸ்திரேலியா சென்றவர்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்திற்கு சென்றவர்களும் தங்கள் உறவினர்களை விமான நிலையத்தில் சந்தித்து கட்டி அணைத்து ஆரவாரம் செய்தனர். தங்கள் உறவினர்களை பார்த்து இயல்பு வாழ்க்கையை தொடங்குவதை எண்ணி மகிழ்ந்த மக்கள் நேற்று இரவு முதல் தூக்கமில்லாமல் சந்தோஷத்தில் இருந்ததாக தெரிவித்தனர்.

English summary
Australia open travel bubble with Newzealand for the first time more than a year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X