சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் திருஞானசம்பந்தர் சிலைகள் உள்பட 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் உள்பட இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன. ஆஸ்திரேலிய அரசு சிலைகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூர் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பழங்கால சிலைகள், அரிய பொக்கிஷங்களை கடத்தி அவற்றை ஆஸ்திரேலியாவில் விற்றுவிட்டார்.

அப்படிவிற்கப்பட்ட பொருட்களை ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகம் வாங்கி வைத்திருந்தது. இதை கண்டுபிடித்த இந்திய அரசு தங்கள் நாட்டிற்கு சொந்தமான கலை பொக்கிஷங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் விவரித்தது. இந்தியாவிற்கு அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது.

'120ஆண்டுகளில் இதுதான் கொடூரமான சுகாதார நெருக்கடி..' டெல்டா கொரோனா..பீதியில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள்'120ஆண்டுகளில் இதுதான் கொடூரமான சுகாதார நெருக்கடி..' டெல்டா கொரோனா..பீதியில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலிய அரசு

இதன் காரணமாக 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான திருஞானசம்பந்தர் சிலைகள் (குழந்தை வடிவம் மற்றும் நடனமாடும் வடிவம்) உள்பட 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் உள்பட 14 பொக்கிஷங்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கலை பொக்கிஷங்கள்

கலை பொக்கிஷங்கள்

அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலை பொக்கிஷங்களை திருப்பித் தருவது என்பது பல வருட ஆராய்ச்சி, உரிய விடாமுயற்சி மற்றும் சட்டக் கோட்பாடுகள் மற்றும் உரிய நெறிமுறை பரிசீலனைகளுக்கு பின்பு மேற்கொள்ளப்பட்டுள்ள உயரிய நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல்

சிலை கடத்தல்

இது குறித்து, கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்செவிட்ச் கூறும் போது "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சியால் கலாச்சார ரீதியான பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது பெருமை அளிக்கிறது. விரைவில் சிலைகள் இந்தியாவிற்கு அனுப்பப்படும். சிலை கடத்தல் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகிறோம் என்றார்.

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்

ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோஹ்ரா, கலைப்படைப்புகளை திருப்பித் தர ஆஸ்திரேலிய அரசு மற்றும் என்ஜிஏவின் முடிவை வரவேற்றுள்ளார். திருஞான சம்பந்தர், நாயன்மார் சிலைகள், குஜராத், ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலை பொக்கிஷங்கள் என 14 பொருட்கள் விரைவில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளது.

English summary
The National Gallery of Australia(NGA) on Thursday announced it would return 14 works of art from its Asian art collection to India. The works being returned are: Child-saint Sambandar, dancing child-saint Sambandar of 12th century belonging to Chola dynasty, Processional standard [‘alam], from Hyderabad, Arch for a Jain shrine, 11th-12th century, Seated Jina, 1163 from Mount Abu region, Rajasthan. The divine couple Lakshmi and Vishnu [Lakshmi Narayana] 11-12th century, Durga Mahisasuramardini, from Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X