சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சிட்னி: படகு வழியாக வந்தால் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவீர்கள் என ஆஸ்திரேலியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு புதிய அதிகாரியாக மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், படகு வழியாக வர முயிற்சிப்பவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சட்டவிரோத புலம்பெயர்வுக்கு ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடியபடியே இருக்கும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மேலும், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய சட்டவிரோதமாக படகுப்பயணத்திற்கு நீங்கள் முயற்சித்தால், நீங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, உங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள் எனக் கூறியுள்ளார். எல்லைகளை பாதுகாப்பது மற்றும் கடலில் இறப்புகளைத் தடுப்பது குறித்து ஆஸ்திரேலியா கடுமையாக இருப்பதாகவும் இக்கொள்கை மாற்றமடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கொள்கை

பாதுகாப்புக் கொள்கை

2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி வெளியேற்றி விடுவோம்.
கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவை அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டு இருக்கின்றனர்.

தீவிர ரோந்து பணி

தீவிர ரோந்து பணி

ஒவ்வொரு நாடுகளும் ஆஸ்திரேலியாவின் கரையோரங்களை கண்காணித்து வருகின்றனர். ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எங்கள் கரையோரப் பாதுகாப்பு அரண்கள் முன்னரை விடவும் உறுதியாக இருக்கின்றன என மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை உறுதிச் செய்துள்ளார்.

கைது நடவடிக்கை தொடரும்

கடந்த செப்டம்பர் 2013 முதல் ஆஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ள்னர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 பேரும், இந்தோனேசியாவில் 66 பேரும், மலேசியாவில் 48 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Australia has categorically stated that if you come across the boat you will be returned to your own country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X