சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டாசு வெடிக்க.. கலை நிகழ்ச்சிகள் கலகலக்க.. சிட்னியைக் கலக்கிய தமிழ் தீபாவளி!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த் ஷோர் தமிழ் சங்கத்தின் சார்பாக, சிட்னி நகரில் தீபாவளி கொண்டாட்டம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர்கள் இணைந்து அக்டோபர் 20, 2019 அன்று தீபாவளியைக் கொண்டாடினார்கள். விழாவிற்கு அணைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையில் உற்ச்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவை திருமதி ஜெயந்தி ஒருங்கிணைத்தார். திருமதி ரேகா அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து செல்வன் சஞ்சய் மற்றும் ஸ்ரீஹாசினி சங்கதின் ஓராண்டு சாதனைகளை விளக்கினார்கள்.

தீபாவளி என்றால் என்ன

தீபாவளி என்றால் என்ன

அனைத்து நிகழ்ச்சிகளையும் வெங்கடேச குமார் மற்றும் செல்வி ஹரிதா கலகலப்பாக தொகுத்து வழங்கினார்கள். செல்வன் கௌஷல் ராஜன் தீபாவளி பற்றி உரையாற்றினார்.

பரத நாட்டியம்

பரத நாட்டியம்

திருமதி ஸ்ருதி பரதநாட்டியத்துடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து செல்வி ம்ருதுலா இனிமையாக வீணை வாசித்தார். அடுத்தபடியாக செல்வி ஸ்ருஷ்டி சாய் பாரதியாரின் நினை சரணடைத்தேன் பாடலை அழகாக பாடினார்.

பக்திப் பாடல்கள்

பக்திப் பாடல்கள்

சிறுமி சஹானா பக்தி பாடலுக்கு அருமையாக பரதநாட்டியம் ஆடினார். சிறுமி கனிஷ்கா மீனாட்சி அம்மன் பாடலையும் சிறுமி ஸ்ரீஹஸினி சினிமா பாடலையம் சிறப்பாக பாடினார்கள்.

புகைப்படம்

புகைப்படம்

அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து குழுவாகவும், குடும்பத்துடன் புகைப்படம் எடுத்ததை தொடர்ந்து செல்வி சஞ்சனா மற்றும் தர்ஷனா ஆகியோர் திரைப்பட பாடலை சேர்ந்து பாடினார்கள். அடுத்து பயிற்சியாளர் திருமதி தனா தலைமையில் சிறுமியர் குழு கரகத்தை தலையில் வைத்து கரகாட்டம் அசத்தலாக ஆடினார்.

களை கட்டிய கரகாட்டம்

களை கட்டிய கரகாட்டம்

இந்த கரகாட்டத்தில் சிறுமிகள் அனு ஆர்யா, ஆஷிகா, அமிர்தா, கனிஷ்கா ஸ்ரீ, ம்ரிதுலா, பிரார்த்தனா, ரியாஷினி, ஸ்ரீ ஹாசினி, ஷ்ரிஷ்டி மற்றும் மிலாஷினி ஆகியோர் ஆடினார்கள். அதை தொடர்ந்து திருமதி சுபாங்கி, நித்யா ஆகியோரும், திருமதி ஆர்த்தி, திவ்யபிரியா ஆகியோரும் குத்து பாடலுக்கு அரங்கம் அதிர ஆடினார்கள்.

இனிய பாடல்கள்

இனிய பாடல்கள்

சிறுவர்கள் சந்தோஷ், விஷால், கௌஷல் மற்றும் பிரனீத் திரைப்பாடல்களுக்கு உற்சாகமாக ஆடினார்கள். செல்வன் சஞ்சய் பாரதியாரின் காக்கை சிறகினிலே பாடலையும் திரைப்பட பாடலையும் இனிமையாக பாடினார்.

விளையாட்டு நிகழ்ச்சிகள்

விளையாட்டு நிகழ்ச்சிகள்

அரசு, குழந்தைகளை வாழ்த்தியும் தீபாவளி பற்றியும் உரையாற்றினார். அதை தொடர்ந்து அனைவருக்குமான விளையாட்டு நிகழ்ச்சிகளை சுபாங்கி மற்றும் நித்யா நடத்தி வைத்தார்.

பரிசுகள் சான்றிதழ்கள்

பரிசுகள் சான்றிதழ்கள்

விழாவிற்கு வருகை தந்த பெரியவர்கள் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இறுதியாக ரேகா நன்றி உரையாற்றினார். இதற்கான ஒலி அமைப்பை வித்யாசாகர் சிறப்பாக ஒருங்கிணைத்தார். விழாவில் அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.

English summary
Australia's North Shore Tamil Sangam celebrated this year Diwali in a grand way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X