சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் மூத்த அதிகாரி பலாத்காரம்..புகார் கூறிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்

Google Oneindia Tamil News

சிட்னி: நாடாளுமன்றத்தில் அமைச்சகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் விசாரணை நடத்த உத்தரவிடுவதாகவும் உறுதியளித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு வேலை பறிபோகும் என அச்சமடைந்ததாக பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது மேலதிகாரிகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததால் தான் புகார் ஏதும் செய்யவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Australias PM asks apology to a woman who said she was raped in parliament

பிரிட்டானி ஹிக்கின்ஸ் (26) நேற்றைய தினம் தொலைகாட்சி சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறிய குறறச்சாட்டுகள் அந்த நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

2019-ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது நாடாளுமன்றத்தில் உடன் பணிபுரிந்த மூத்த அதிகாரி ஒருவர் என்னை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறினார். ஆனால் அவரோ வீட்டில் விடாமல் தன்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.

தான் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் தூங்கியதாகவும் கூறிய அவர், தான் கண்விழித்தபோது, அந்த மூத்த அதிகாரி பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதை பார்த்ததாகவும் கூறினார்.

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் யூனியன் பிரதேசங்களாகிறதா?.. மத்திய அரசு விளக்கம் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் யூனியன் பிரதேசங்களாகிறதா?.. மத்திய அரசு விளக்கம்

இதையடுத்து கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார் மோரிசன். பெண் அதிகாரியின் குற்றச்சாட்டுகளை கேட்டு நொறுங்கிவிட்டதாக கூறிய மோரிசன், இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கவே கூடாது என்றார்.

English summary
Australia's Prime Minister Scott Morrison apologised to a woman who accuses that she was raped in a parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X