சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1.5 மீட்டர் கேப் விட்டு "என்ஜாய்" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்

Google Oneindia Tamil News

சிட்னி: 1.5 மீட்டர் சமூக இடைவெளி விட்டு உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என ஆஸ்திரேலிய நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் இந்த உலகை விட்டு போகாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள புதிய முறை வாழ்வியலை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் மற்றவர்களுடன் பழக வேண்டும். யாருடனும் கைகுலுக்கக் கூடாது.

இடைவெளி

இடைவெளி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பெட்ரூமிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பெட்ரூமில் எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என யோசிப்பது எங்களுக்கு புரிகிறது.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

இதற்கான வழியையும் ஆஸ்திரேலிய நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கொரோனா பரவாத அளவுக்கு பாதுகாப்பாக எப்படி உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் நடந்து கொண்டால் விந்தணுக்கள் மூலமாகவும் கொரோனா பரவாதாம்.

உடலுறவு

உடலுறவு

கொரோனா காலத்தில் உடலுறவு வைத்து கொள்வது தவறில்லை. அதே நேரத்தில் மூச்சுக் காற்றில் நீர்த் துகள்கள் மூலமாகவும் எச்சில் மூலமாகவும் நோய் பரவலாம் என்பதால் உடலுறவின்போது 1.5 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

இந்த அறிவிப்பால் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அது எப்படி சமூக இடைவெளியுடன் உடலுறவு வைத்து கொள்வது? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் மருத்துவர்கள் சிலர் விளக்கமளித்துள்ளனர். பாதுகாப்பான உடலுறவு என்றால் சுயஇன்பம்தான் சரி என்று ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மாஸ்க்

பாதுகாப்பு மாஸ்க்

மற்றொருவரோ உடலுறவின்போது முத்தம் வேண்டாம் என்றும் இன்னொரு மருத்துவரோ உடலுறவின் போது மூன்றடுக்கு பாதுகாப்பு மாஸ்கை அணிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கமளித்துள்ளார். தங்கள் இணையை தவிர்த்து காசு கொடுத்து யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருப்பதால் மக்கள் மீண்டும் குழம்பியுள்ளனர்.

English summary
Australia says Couples have to stay 1.5 metres Covid safety sex .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X