சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்!

குஜராத்தை சேர்ந்த பிரபல அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்!- வீடியோ

    சிட்னி: குஜராத்தை சேர்ந்த பிரபல அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடி வருகிறார்கள்.

    குஜராத்தில் இருக்கும் அதானி நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த கவுதம் அதானி பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

    ஏற்கனவே அதானி நிறுவனத்திற்கு எதிராக நிறைய குற்றச்சாட்டுகள் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கார்மிக்கேல் என்னும் இடத்தில் அதானி நிறுவனம் நிலக்கரி எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. 4 வருடத்திற்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் அங்குள்ள வளங்கள் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மொத்தமாக மாற்றமடையும், நிலத்தடி நீர் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

    ஆஸ்திரேலியா மோசம்

    ஆஸ்திரேலியா மோசம்

    ஆஸ்திரேலியா எப்போதும் இல்லாத வறுமையை தற்போது சந்தித்து வருகிறது. அங்கு மிக மோசமான காலநிலை நிலவுகிறது. பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுக்க அதானி நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

     போராட்டம் தொடங்கியது

    போராட்டம் தொடங்கியது

    இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவே, உடனே போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்தில் நடக்கும் மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் போலவேதான் அங்கும் போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு இதனால் போராடி வருகிறார்கள்.

    பெரும் போராட்டம்

    பெரும் போராட்டம்

    முக்கியமாக குழந்தைகள் பலர் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே உள்ளே சென்று போராடுவது, விளையாட்டு போட்டிகளின் போது போராடுவது, மைதானத்திற்குள் சென்று போட்டிகளின் போது போராடுவது என்று மிக வித்தியாசமான போராட்டங்களை அங்கு மக்கள் நடத்தி வருகிறார்கள்.

    அரசு உதவி

    அரசு உதவி

    ஆனால் அங்கு ஆஸ்திரேலிய அரசு அங்கு அதானி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவும் இங்கிருந்து போதுமான ஆதரவை அந்நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. மக்கள் போராட்டம் காரணமாக நான்கு வருடங்களாக இந்த திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது.

    ஸ்டாப் அதானி

    ஸ்டாப் அதானி

    அங்கு இதற்காக ஸ்டாப் அதானி என்று இயக்கத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக இணையதளம் கூட உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது நடக்கும் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் கூட அதானி நிறுவனத்திற்கு எதிராக நிறைய பலகைகள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Stop Adani Campaign: Australian people protest against Adani's coal project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X