சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்

Google Oneindia Tamil News

சிட்னி: இந்திய பெண் ஒருவர் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ் அறிவித்துள்ளது.

Recommended Video

    6 ஆண்டுகளாக துப்பு கிடைக்காத Monika Chetty கொலை | Oneindia Tamil

    ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கே உள்ளது வெஸ்ட் ஹாக்ஸ்டான் பகுதியாகும். இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் புதர் மண்டிக் கிடந்த காட்டு பகுதியில் முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் ஒரு பெண் மீட்கப்பட்டார்.

    உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அதே ஆண்டில் ஜனவரி 31-ஆம் தேதி பலியாகிவிட்டார்.

    5 முதல் 10 நாட்கள்

    5 முதல் 10 நாட்கள்

    விசாரணையில் உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 39 வயதான மோனிகா ஷெட்டி என்பது தெரியவந்தது. அவர் ஆஸ்திரேலியாவில் நர்ஸாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் 5 முதல் 10 நாட்கள் வரை ஆசிடில் முக்கி எடுக்கப்பட்டிருந்ததால் இத்தனை பாதிப்புகள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    போலீஸார்

    போலீஸார்

    இந்த வழக்கு குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இது வரை இந்த கொலை தொடர்பான எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதுவரை எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் போலீஸார் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

    மர்மங்கள்

    அதாவது இந்த வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் 2.7 கோடியாகும். இதன் மூலம் இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் விலகும் என்பது போலீஸாரின் நம்பிக்கையாகும்.

    தண்டனை

    தண்டனை

    இந்த வழக்கு தொடர்பாக புலனாய்வுத் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மோனிகா ஷெட்டியின் மகன் டேனியர் ஷெட்டி கூறுகையில் எனது தாய் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்த கொடுங்குற்றத்தை செய்வதர் யார் என தெரியவேண்டும் என்றார்.

    English summary
    Australian police announced reward for info about the Indian nurse murder case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X