சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்

Google Oneindia Tamil News

சிட்னி: வட அமெரிக்கா ஒரு பக்கம் கடும் குளிரிலும் பனியிலும் நடுங்குகிறது என்றால், மறுபக்கம் ஆஸ்திரேலியா கடுமையான வெயிலில் சிக்கி வறுபட்டுக் கொண்டிருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு உயர்ந்தபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளதாம். வெயிலைத் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனராம்.

ஆஸ்திரேலியா முழுவதும் அனல் காற்று வீசுகிறது. இதுவரை இந்த அளவுக்கு அனலை கோடை காலத்தில் ஆஸ்திரேலியா சந்தித்ததில்லை. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான மாதமாக 2018 டிசம்பர் பதிவாகியுள்ளது.

வெப்பம்

வெப்பம்

கடும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ விபத்துகளும் நடந்து வருகின்றன. நவம்பர் மத்தியில்தான் அனல் காற்று அதிகமாக வீச ஆரம்பித்தது. குவீன்ஸ்லாந்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியது.

 அதிகமான வெப்ப நிலை

அதிகமான வெப்ப நிலை

இதுதொடர்பான வரைபடம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. தனது டெர்ரா சாட்டிலைட் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்து நாசா இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளது. இதில் சிவப்பு நிறத்தில் இருப்பவை சராசரிக்கும் அதிகமான வெப்ப நிலை பதிவான பகுதிகள் ஆகும். நீல நிறத்தில் இருப்பவை சராசரிக்கும் குறைவான வெப்ப நிலை பதிவான பகுதிகள் ஆகும். வெள்ளை நிறத்தில் இருப்பவை சராசரி வெப்ப நிலை பதிவான பகுதிகள்.

104 டிகிரி பாரன்ஹீட்

104 டிகிரி பாரன்ஹீட்

ஜனவரி 11 மற்றும் 18ம் தேதிகளுக்கு இடைப்பட்ட ஐந்து நாட்களிலும் தினசரி வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. ஜனவரி 25ம் தேதி 116 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

சுருண்டு கொண்டிருக்கிறது

சுருண்டு கொண்டிருக்கிறது

வெயிலைத் தாங்க முடியாமல் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா குளிரில் அலறுகிறது என்றால் ஆஸ்திரேலியா வெயிலில் சுருண்டு கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒவ்வொரு பிரச்சினை.

English summary
The entire Austrlaia are reeling under severe heat waves as the temperatures go high in this Sorching summer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X