சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சிட்னி: கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவும் வழிமொழிந்து உள்ளது.

Recommended Video

    US கிளிப்பிள்ளையா ? ஆஸ்திரேலியாவை கிண்டலாக எச்சரித்த சீனா

    இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்த போதிலும், சீனா அது குறித்து வெளியில் சொல்லவில்லை. மூடி மறைத்தது. இதனால், அந்த பாதிப்பு கட்டுக்கடங்காமல் போய், இப்போது இந்தியா, அமெரிக்கா என உலக நாடுகள் அத்தனையிலும், பெரிதாக பாதிப்பு உள்ளது.

    உயிரோடு இருக்கிறார் கிம் ஜாங்? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு.. வெளியான போட்டோஉயிரோடு இருக்கிறார் கிம் ஜாங்? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு.. வெளியான போட்டோ

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவின் இந்த மூடிமறைப்புக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய, சுதந்திரமான விசாரணை அமைப்பு மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இதை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. இந்த நிலையில் சீன தூதர், ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியாவின் பொருட்களை சீனர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

    ஏற்றுமதி

    ஏற்றுமதி

    மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது தடைபடும். மாட்டு இறைச்சி, ஒயின் போன்ற முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள் அடி வாங்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சொல்வதை ஆஸ்திரேலியா கிளிப்பிள்ளை போல சொல்வதாக சீன தூதர் கிண்டல் செய்துள்ளார்.

    யாருக்குத்தான் விசாரணை தேவையில்லை

    யாருக்குத்தான் விசாரணை தேவையில்லை

    இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில், ஆஸ்திரேலியாவை, சீன வெளியுறவு துறை மிரட்டுவதாக செய்திகளின் வாயிலாக அறிந்தோம். உலகமே பாதிக்கப்பட்டுள்ள ஒரு விஷயம் எப்படி தொடங்கியது என்பது பற்றி அறிந்து கொள்ள உலகின் எந்த நாட்டுக்குத்தான் விருப்பமில்லை என்று சொல்லமுடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    China’s warning of trade repercussions from Australia’s campaign for an independent inquiry into the coronavirus has rattled Australian business leaders as President Donald Trump’s administration urges other governments to back such a probe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X