சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்!!

Google Oneindia Tamil News

சிட்னி: ரூபாய் நோட்டுக்கள், கண்ணாடி, டச் ஸ்கிரீன் கருவிகளான செல்போன், லேப்டாப், கதவு கைப்பிடிகள், ஏணிப்படி கைப்பிடிகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் வகையில் 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நோய் ஆய்வு மையம் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது, கண்ணாடி, செல்போன் மேல்புறம், ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 20 டிகிரி அறை வெப்பநிலையில் கொரோனா 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும், இந்த கொரோனா மற்றவர்களுக்கு எளிதில் தொற்றை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மாறாக ஃபுளூ வைரஸ் 17 நாட்கள்தான் உயிர் வாழும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா... மருத்துவமனையில் சிகிச்சை!! சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா... மருத்துவமனையில் சிகிச்சை!!

ஆயுட்காலம்

ஆயுட்காலம்

மேலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைரஸின் ஆயுட்காலம் ஒரு நாள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆய்வு மூலம் குளிர்காலத்தில் இந்த வைரஸ் நீண்ட நாட்கள் உயிருடன் வாழும் என்பதும் குளிர்காலத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் தெரிய வந்துள்ளது.

கைகழுவுதல்

கைகழுவுதல்

இதுகுறித்து ஆஸ்திரேலியே ஆய்வு மையத்தின் இயக்குநர் டெப்பி ஈகிள்ஸ் கூறுகையில், ''கண்ணாடி மற்றும் செல்போனின் மேல்புறத்தில் வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், அடிக்கடி கைகளை சோப் கொண்டு கழுவுவது முக்கியம். இருமும்போது, தும்மும்போது, பேசும்போது, பாடும்போது, மூச்சுவிடும்போது இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும். இந்தப் பொருட்கள் எளிதில் வைரஸை பரப்பும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆடைகள்

ஆடைகள்

மேலும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில், ''காட்டன் ஆடைகள் மீது உயிர் வாழ்வதைவிட துளை இல்லாத மென்மையான பொருட்களின் மீது ஆடை மீது உயிர் வாழும் தன்மை கொண்டது'' என்று தெரிய வந்துள்ளது.

பாலிமர்

பாலிமர்

இவர்கள் நடத்திய ஆய்வில் ஸ்டீல் பொருட்களின் மீது 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5,6 நாட்களும், 30 டிகிரி செல்சியஸில் 1.74 நாட்களும், 40 டிகிரி செல்சியஸில் 4.86 மணி நேரமும் உயிர் வாழும். இதுவே பாலிமர் நோட்டுகளில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 6.85 நாட்களும், 30 டிகிரி செல்சியஸில் 2.04 நாட்களும், 40 டிகிரி செல்சியஸில் 4.78 மணி நேரமும் உயிர் வாழும்.

கண்ணாடி

கண்ணாடி

பேப்பர் நோட்டுகளில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 9.13 நாட்களும், 30 டிகிரி செல்சியஸில் 4.32 நாட்களும், 40 டிகிரி செல்சியஸில் 5.39 மணி நேரமும் உயிர் வாழும். இதுவே கண்ணாடி மீது 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 6.32 நாட்களும், 30 டிகிரி செல்சியஸில் 1.45 நாட்களும், 40 டிகிரி செல்சியஸில் 6.55 மணி நேரமும் உயிர் வாழும். காட்டன் துணிகளில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5.57 நாட்களும், 30 டிகிரி செல்சியஸில் 1.65 நாட்களும் உயிர் வாழும் என்று தெரிய வந்துள்ளது.

English summary
coronavirus on mobile phones and banknotes survive for 28 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X