சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்

Google Oneindia Tamil News

சிட்னி: பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது.

Recommended Video

    Corona Virus: வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன?

    சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் தினமும் கொரோனாவால் உயிழந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்தியாவில் கொரோனா வைரஸால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஏன் தட்டுப்பாடு

    ஏன் தட்டுப்பாடு

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஆஸ்திரேலியாவில் விசித்திரமாக திடீர் என்று டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் எல்லா மால்களிலும் உள்ள டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்து வருகிறார்கள். மிக அதிக எண்ணிக்கையில் இதனால் மூட்டை மூட்டையாக அவர்கள் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி வருகிறார்கள்.

    தவிக்கும் மக்கள்

    தவிக்கும் மக்கள்

    பல மால்களில் இதனால் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் மொத்தமாக தீர்ந்துவிட்டது. மக்கள் மொத்தமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்ததால் புதிதாக மக்கள் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் அங்கு டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களின் விலை விறுவிறுவென அதிகரித்துள்ளது. . அருகில் இருக்கும் நாடுகளில் இருந்து புதிதாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் லோட்களை இறக்க வேண்டிய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.

    உற்பத்தி பாதிப்பு

    டாய்லெட் டிஸ்யூ பேப்பர் இந்தியாவை தவிர எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய பொருள். ஆஸ்திரேலியாவில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் தயாரிக்கப்படுவதில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் உற்பத்தி பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்த மக்கள் டாஸ்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்து வருகிறார்கள்.

    அச்சிடாத பக்கங்கள்

    அச்சிடாத பக்கங்கள்

    இதனால் ஆஸ்திரேலியாவில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்ருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு ஒரு குடும்பத்திற்கு 4 பாக்கெட்டுகள் வீதம் ரேஷன் முறையில் அதை விற்று வருகிறது. இந்நிலையில் டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனமான என்டி நியூஸ் இரண்டு தாள்களை டாய்லெட் டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தி கொள்ளுங்கள் மக்களே என்று இரண்டு தாளில் எதையும் அச்சிடவில்லை. செய்தியாளில் வரிசையாக எல்லா பக்கத்திலும் செய்தியை அச்சிட்ட நிறுவனம் இடையில் இரண்டு பக்கத்தில் எதையும் அச்சிடவில்லை. இதன் வீடியோவை அந்த நிறுவனம் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

    English summary
    An Australian newspaper has recently printed extra pages to be used as toilet paper after coronavirus fears
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X