சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி

கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் உடைந்து போய் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் நிறுவனங்களை வாங்க சீனா முயன்று கொண்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சிட்னி: கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் உடைந்து போய் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் நிறுவனங்களை வாங்க சீனா முயன்று கொண்டு வருகிறது.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. முக்கியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. ஆனால் கொரோனா முதலில் உருவான சீனாவில் தற்போது பொருளாதாரம் கொஞ்சம் சரியாகி வருகிறது.

    இந்த மாத இறுதியில் அங்கு பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஏற்கனவே தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதலில் எப்படி தொடங்கியது

    முதலில் எப்படி தொடங்கியது

    சீனாவின் பொருளாதாரம் மீண்டும் வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. கொரோனனாவால் உலகிலேயே மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த ஜிடிபியில் ஏற்கனவே 22% இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் தொடங்கி, மிக சிறிய நிறுவனங்கள் வரை எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.

    உணவு துறை பாதித்தது

    உணவு துறை பாதித்தது

    மிக முக்கியமாக ஆஸ்திரேலியாவின் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் எல்லாம் மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. அதேபோல் உணவு உற்பத்தி துறைதான் மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது. ஐரோப்பா நாடுகளுக்கு உணவுகளை ஏற்றுமதி செய்து வந்த ஆஸ்திரேலியா, தற்போது விமான போக்குவரத்து தடை காரணமாக உணவு ஏற்றுமதியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுமதி செய்தது

    கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுமதி செய்தது

    இந்த நிலையில்தான், இந்த சந்தர்ப்பத்தை சீனா சரியாக பயன்படுத்திக் கொண்டது. உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்று ஆஸ்திரேலியாவிடம் சீனா கூறியது. ஆஸ்திரேலியா - சீனா இடையே ஏற்றுமதி இறக்குமதி ரீதியாக பெரிய உறவு உள்ளது. இதனால் சீனாவிற்கு ஆஸ்திரேலியா லாப்ஸ்டர் போன்ற உணவு பொருட்களை டன் கணக்கில் ஏற்றுமதி செய்தது. ஆனால் இங்குதான் ஆஸ்திரேலியாவிற்கு சீனா செக் வைத்தது. கொரோனாவிற்கும் இடையிலும் கூட சீனா இங்குதான் தனது வேலையை காட்டியது.

    ஆனாலும் கட்டுப்படி ஆகவில்லை

    ஆனாலும் கட்டுப்படி ஆகவில்லை

    அதன்படி நீங்கள் எங்கள் நாட்டிற்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். ஆனால் நாங்கள் உங்களுக்கு அமெரிக்க டாலர்களை கொடுக்க மாட்டோம். மாறாக நாங்கள் உங்களுக்கு மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்வோம் என்று கூறியது. தங்களுக்கு பணம் கிடைக்கும், இதனால் இழந்த பொருளாதாரத்தை மீட்டு எடுக்கலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியாவிற்கு இது பெரிய ஏமாற்றமாக மாறியது. ஆனாலும் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா இந்த டீலை ஏற்றுக்கொண்டது.

    மிக மோசமான நிலையில் சீனா

    மிக மோசமான நிலையில் சீனா

    ஆனால் சீனா இங்கும் தனது வேலையை தொடர்ந்து செய்தது. ஆஸ்திரேலியாவிற்கு சீனா அனுப்பிய பொருட்களில் 40% மருத்துவ பொருட்கள் மிக மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. கிளவுஸ், மாஸ்குகளில் துளைகள் இருந்தது. மருத்துவ கண்ணாடிகள் உடைந்த நிலையில் காணப்பட்டது. ஜாக்கெட்டுகள் தரமற்று காணப்பட்டது. இதை பார்த்து ஆஸ்திரேலியா அதிர்ச்சி அடைந்தது.

    தடை விதித்தது

    தடை விதித்தது

    இந்த பொருட்களை திருப்பி கொடுக்க ஆஸ்திரேலியா முயன்று வருகிறது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளும் முடிவில் சீனா இல்லை. அதே சமயம் சீனாவிற்கு ஆஸ்திரேலியர்கள் சிலர் மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியாவில் மருத்துவ பொருட்களுக்கு பஞ்சம் வந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மருத்துவ, உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா அரசு தடை விதித்து இருக்கிறது. மோசமான மருத்துவ பொருட்களை அனுப்பிய சீனா மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது.

    சீனா திட்டம் என்ன?

    சீனா திட்டம் என்ன?

    இந்த சண்டை இப்படி போய்க் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவின் முக்கிய நிறுவனங்களை வாங்க சீனா முடிவு எடுத்துள்ளது. அதாவது பொருளாதார சரிவு காரணமாக ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பல சரிவுகளை சந்தித்துள்ளது. இந்த பெரிய பெரிய நிறுவனங்களை எல்லாம் மொத்தமாக வளைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக Qantas, ஆஸ்திரேலியாவின் இருக்கும் விர்ஜின் நிறுவனத்தின் கிளைகள் உடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தடை விதித்து இருக்கிறது

    தடை விதித்து இருக்கிறது

    இதை தடுக்கும் பொருட்டு, அந்நிய முதலீடு தொடர்பான சட்டத்தில் ஆஸ்திரேலியா சட்ட திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பல பொருளாதார சரிவு காரணமாக தங்கள் நிறுவனங்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது என்கிறார்கள். இதனால் சீனா - ஆஸ்திரேலியா இடையே மிகப்பெரிய பொருளாதார போர் வெடிக்கும் நிலை உள்ளது. கொரோனா காரணமாக சீனாவின் கை ஓங்கி உள்ளது. கொரோனாவை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை சீனா மொத்தமாக கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது .

    English summary
    Coronavirus: Trade war between China and Australi starts amid the COVID- 19 outbreak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X