சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் விசித்திரமாக திடீர் என்று டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சிட்னி: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் விசித்திரமாக திடீர் என்று டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. உலகில் மொத்தம் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3118 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 91000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா வைரசும்.. சில உண்மைகளும்.. யாரை அதிகம் பாதிக்கும்.. எப்படி பாதிக்கும்? கொரோனா வைரசும்.. சில உண்மைகளும்.. யாரை அதிகம் பாதிக்கும்.. எப்படி பாதிக்கும்?

என்ன தட்டுப்பாடு

என்ன தட்டுப்பாடு

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் விசித்திரமாக திடீர் என்று டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் எல்லா மால்களிலும் உள்ள டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்து வருகிறார்கள். மிக அதிக எண்ணிக்கையில் இதனால் மூட்டை மூட்டையாக அவர்கள் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

காலி

காலி

பல மால்களில் இதனால் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் காலியாகிவிட்டது. மக்கள் மொத்தமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்ததால் புதிதாக மக்கள் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களின் விலை அதிகரித்து இருக்கிறது. அருகில் இருக்கும் நாடுகளில் இருந்து புதிதாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் லோட்களை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. டாய்லெட் டிஸ்யூ பேப்பர் என்பது வெளிநாடுகளில் அத்தியாவசிய பொருள். ஆனால் பெரும்பாலான டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்படுவது இல்லை. அது வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் உற்பத்தி பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக நிறுத்தம்

மொத்தமாக நிறுத்தம்

இதனால் ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்படும், டாய்லெட் பேப்பர்கள் குறைந்துள்ளது. இது தொடர்பான அங்கு வெளியான செய்தியால் மக்கள் பீதிக்கு உள்ளானார்கள். இதனால் எங்கே நமக்கு வரும் நாட்களில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர் கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்சத்தில் மொத்தமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்து வருகிறார்கள் . அரசு இந்த தட்டுப்பாட்டை மறுத்தும் கூட மக்கள் தொடர்ந்து டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி வருகிறார்கள்.

Recommended Video

    ஐயோ கொரோனா வைரஸ்.. அரசு பஸ்சை துடைத்தெடுக்கும் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ
    என்ன ரேஷன்

    என்ன ரேஷன்

    இதனால் தற்போது ஆஸ்திரேலியாவில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை ரேஷன் முறையில் விற்க தொடங்கி உள்ளனர். அதன்படி ஒரு குடும்பத்திற்கு 4 பாக்கெட்டுகள் வீதம் மட்டுமே வாங்க முடியும் என்று கூறிவிட்டனர். அமெரிக்காவிலும் கொஞ்சம் கொஞ்சமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. நல்லவேளை இந்தியர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை கிடையாது..!

    English summary
    Coronavirus: Why are people in Australia stockpiling toilet paper a lot? - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X