அடுத்த லெவலில் ஆஸ்திரேலியா.. 16-17 வயதுடைய சிறுவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி.. அரசு அதிரடி
சிட்னி: 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது..!
கொரோனாவைரஸ் பரவலை உலக நாடுகளால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.. எனினும், அதற்காக லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்..
அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சித்தும் வருகிறார்கள். இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளுக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது..
ஐயய்யோ அவரா.. அவரு பயங்கரமான ஆளாச்சே.. அம்மாவுக்கு சோறு கூட தராதவர்.. சித்து மீது சகோதரி பரபர புகார்

பிரான்ஸ்
அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன... எனினும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசிகளையும் பல்வேறு நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. அதன்படி, 2 டோஸ் போட்டபிறகு, 3வதாக பூஸ்டர் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள ஒவ்வொரு நாடும் அனுமதி தந்து வருகின்றன..

மொத்த பாதிப்பு
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள சிறார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இப்போதைக்கு அந்த நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பானது, 2,465,811 ஆக உயர்ந்துள்ளது... இதுவரை மொத்தம் 3,465 பேர் உயிரிழந்துள்ளனர்.. இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கை என்றாலும், இறப்பு விகிதத்தை மேலும் கட்டுப்படுத்த அந்த நாடு முயன்று வருகிறது.

தடுப்பூசி
அதற்காகத்தான் பூஸ்டர் தடுப்பூசிகளில் கவனத்தை திருப்பி உள்ளது.. அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.. இதுவரை 93 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர்... 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

அனுமதி
இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறுவர்களுக்கு பூஸ்டராக பயன்படுத்தப்படும் ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3வது அலையை தடுக்க, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை மக்கள் விரைவுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.