சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் மீண்டும் சோகம்! ஏராளமான கோலாக்கள் உயிரிழப்பு.. 80 கோலாக்கள் படுகாயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆஸ்திரேலியா வில் காட்டு தீ விலங்குகளின் நிலை என்ன |Australia fires: The animals struggling in the crisis

    சிட்னி: ஆஸ்திரேலியாவில் புல்டோசர்களுடன் வந்து காடுகளை ஒரு கும்பல் அழித்தது. இதில் அங்கிருந்த ஏராளமான கோலா இன விலங்குகள் காயம் அடைந்த நிலையில் அவை கருணை கொலை செய்யப்பட்டன. 80க்கும் மேற்பட்ட கோலாக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடலோர நகரமான போர்ட்லேண்டிற்கு அருகிலுள்ள ஒரு புளூகம் தோட்டத்தில் புல்டோசர்களுடன் வந்த மரம் வெட்டும் கும்பல் அங்கிருந்த மரங்களை அழித்ததில் அங்கிருந்த ஏராளமான கோலாக்கள் காயம் அடைந்தன. இதில் பல கருணை கொலை செய்யப்பட்டன 80க்கும் மேற்பட்ட கோலாக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றன.

    Dozens Of Koalas Killed After Loggers Bulldoze Plantation In Australia

    இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "மிகவும் துன்பகரமான சம்பவம்" என்று வேதனை தெரிவித்துள்ள விக்டோரியாவின் சுற்றுச்சூழல் துறை மாநில பாதுகாப்பு ஒழுங்குமுறை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

    இது வேண்டுமன்றே மனிதர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டு இருப்பது நீதி விசாரணையில் தெரியவந்தால் நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது ஆஸ்திரேலியாவின் பூர்வீக வனவிலங்குகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட சட்டங்களின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா!வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா!

    மருத்துவ சிகிச்சைக்காக இந்த வார இறுதியில் சுமார் 80 கோலாக்கள் தோட்டத் தளத்திலிருந்து தூக்கிக்கொண்டு வரப்பட்டதாகவும், மற்றவைகள் காப்பாற்ற முடியாத மரணத்தை தழுவி விட்டதால் அவை கொண்டுவரப்பட்வில்லை என்றும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ காரணமாக டிசம்பரில் ஆயிரக்கணக்கான கோலாக்கள் உயிரிழந்தன. அந்த சம்பவத்திற்கு பிறகு மனித தவறால் மீண்டும் கோலாக்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Dozens Of Koalas Killed, 80 more koalas are being treated for injuries After Loggers Bulldoze Plantation In Australia
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X