சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் பரவும் பயங்கர காட்டுத்தீ.. அழிந்த எண்ணற்ற உயிரினங்களும் மூலிகைகளும்!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயங்கரமாக காட்டுத் தீ பரவி வருவதால் அங்கு வாழும் உயிரினங்கள் அழிந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும் விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.

சுமார் 4 நாட்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இது வரை 18 பேர் பலியாகிவிட்டதாக தெரிகிறது. விக்டோரியாவின் சன்புரி அருகே காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உலக அரசியலை புரட்டிப்போட்ட அந்த ஓர் அதிகாலை.. ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? போர் வருகிறதா?உலக அரசியலை புரட்டிப்போட்ட அந்த ஓர் அதிகாலை.. ஈரான் அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? போர் வருகிறதா?

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் விலங்குகளையும் இயற்கை ஆர்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் எலியை போன்று அமைப்பை உடைய டன்னார்ட் என்ற உயிரினம் ஆஸ்திரேலியாவில் கங்காரு தீவுகளை தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை.

ஆஸ்திரேலிய காடுகள்

ஆஸ்திரேலிய காடுகள்

அத்தகைய அரிய வகை உயிரினங்கள் இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அரிய வகை செடிகள் மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலிய காடுகள் 5.8 மீட்டர் ஹெக்டேர் தீப்பிடித்துள்ளது.

கண்டெடுப்பு

கண்டெடுப்பு

கங்காரு, பறவைக் கூட்டங்களின் புகைப்படங்களை பார்க்கும் போது அவை உயிரோடு இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. சில பறவைகள் அங்கிருந்து தப்பவும் முயற்சித்திருக்கும் என தெரிகிறது. பறக்க முடியாத உயிரினங்களான கோலா, கிரேட்டர் கிளைடர்ஸ் ஆகியவை எரியப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

அமேசான் காடுகள்

அமேசான் காடுகள்

நிலத்திற்கு அடியில் வாழும் வோம்பாட்கள் உயிருடன் இருக்கலாம். ஆனால் அவை உணவு உட்கொள்ள எரிந்த பகுதிகளில் எதுவும் கிடைக்காது. இந்த காட்டுத்தீ குறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்தை அமேசான் காட்டுடன் ஒப்பிடுகின்றனர்.

English summary
Ecologists concern over bushfire in Australia forests as it leads Millions of the species have been killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X