சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவையே முந்தியது சீனா.. உலக நாடுகளுடன் ராஜதந்திர உறவுக்காக தூதர்களை நியமிப்பதில் செம்ம!

Google Oneindia Tamil News

சிட்னி: உலக நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை பேணுவதற்காக தூதர்களை நியமிக்கும் விஷயத்தில் அமெரிக்காவை முதல்முறையாக சீனா முந்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒட்டுமொத்தமாக 276 இடங்களில் ராஜதந்திர உறவுக்காக தூதர்களை சீன நியமித்திருப்பதாகவும் இது அமெரிக்காவை விட மூன்று இடம்அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகில் ஒவ்வொரு நாடுமே மற்ற நாடுகளில் தங்கள் நாட்டின் சார்பில் தூதர்களை அனுப்பி அந்த நாட்டுடன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, அரசியல், உள்ளிட்டவற்றில் தங்கள் நாட்டுக்கு சாதகமான பயன்களை பெறுகின்றன. அந்த மாதிரி தூதர்களை நியமிப்பதில் சீனா தான் டாப் இடத்தில் இருக்கிறது.

துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? அஜித் பவார் கூறும் பரபரப்பு காரணங்கள் இவை!துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? அஜித் பவார் கூறும் பரபரப்பு காரணங்கள் இவை!

விரைவான நெட்வொர்க்

விரைவான நெட்வொர்க்

ஆஸ்திரேலியாவின் லோவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடுகளுக்கு தூதர்களை நியமிப்பதன் மூலம் விரைவான ராஜதந்திர நெட்வொர்க்குகளை உருவாக்குவதில் சீனா முன்னோடியாக உள்ளது. தைவானில் அண்மையில் தூதரகத்தை திறந்ததன் மூலம் இந்த நிலையை சீனா எட்டியுள்ளது.

அமரிக்காவை முந்தியது

அமரிக்காவை முந்தியது

"உலகளவில் 276 இடங்களில் தூதர்களை நியமித்ததன் மூலம், சீனா முதன்முறையாக அமெரிக்காவின் ராஜதந்திர நெட்வொர்கைவிட மூன்று இடத்தை பெற்று அந்த நாட்டை முறியடித்தது" என்று லோவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மூடியது

அமெரிக்கா மூடியது

அமெரிக்கா புதிதாக தூதரங்களை திறக்கவில்லை, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தூதரகத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது - பிரிட்டானில் ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் விஷம் குடித்ததைத் தொடர்ந்து தூதர் வெளியேற்றம் நடந்தது.

சீனா முன்னேற்றம்

சீனா முன்னேற்றம்

ஆனால் தூதரகம் வைத்திருப்பதற்கான மிகவும் பிரபலமான இடமாக அமெரிக்கா இருருக்கிறது.. இப்போது அதிலும் சீனாமுன்னேறி வருகிறது. அங்கு 61 நாடுகள் சீனாவில் 256 வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள் என மற்றும் மொத்தம் 342 பதவிகளுக்கு ஆட்களை நியமித்துள்ளன.

ராஜதந்திரம்

ராஜதந்திரம்

இந்நிலையல் சீனா தூதர்களை நியமனம் செய்வதில் வளர்ந்து வந்தது, "புர்கினா பாசோ, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், காம்பியா, மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி - தைவான் போன்றவற்றில் தூதர்களை நியமித்துள்ளது. தூதர்களை நியமித்து ராஜதந்திர உறவை வளர்ப்பதன் மூலம் உலகின் ஒவ்வாரு நாட்டையும் தனது நாட்டின் பொருட்களை விற்கும் சந்தை மற்றும் வர்த்தக உறவுக்கு பெரிதும் சீனா மாற்றி வருகிறது. சீனா வர்த்தகத்தில் வளர ராஜதந்திர உறவும் முக்கிய காரணம் ஆகும்.

English summary
"With 276 posts globally, For the first time, China overtakes US in number of diplomatic missions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X