சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. சிட்னியை சட்னியாக்கி விட்டதே இந்த அடாத மழை.. வரலாறு காணாத வெள்ளம்!

Google Oneindia Tamil News

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால், அங்குள்ள மிகப்பெரிய நகரமான சிட்னி சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடுகிறது.

சிட்னி மற்றும் மத்திய கடலோரப்பகுதி முழுவதும் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால், மின்சாரம் இல்லாமல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இணைப்பு தடைபட்டுள்ளது.

heavily rain falling in Australia

விமான நிலையத்தை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஒரே ஒரு ரன்வேயில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விமானங்கள் தாமதமாகவும், விமான சேவை அவ்வப்போது ரத்தும் செய்யப்பட்டு வருவதாக சிட்னி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் வழக்கமாக நவம்பர் மாதத்தில் 84 மி.மீ அளவு மழை சராசரியாக பெய்யும். ஆனால், இன்று ஒரே நாளில் மட்டும் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, என அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

English summary
Sydney has been drenched by more than a month's worth of rain in just two hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X