சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சின்ன கேப்சூல் மாயம்.." அலறிய ஆஸ்திரேலியா.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்.. நிம்மதி! என்ன நடந்தது

ஆஸ்திரேலியாவில் சின்ன ரேடியோ ஆக்டிவ் கேப்சூல் மாயமான சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சிட்னி: சின்ன ரேடியோ ஆக்டிவ் கேப்சூல் மாயமான சம்பவம் ஆஸ்திரேலியாவையே அலறவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் அங்கு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கதிர்வீச்சு பாதிப்பால் கேன்சர் உட்பட பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. கதிர்வீச்சு வெளியிடும் பொருட்களைத் தெரியாமல் தொட்டாலும் கூட கதிர்வீச்சின் அளவை பொறுத்து அது மோசமான பாதிப்பைக் கூட ஏற்படுத்தலாம்.

இதன் காரணமாகவே அனைத்து நாடுகளும் கதிர்வீச்சு நிறைந்த பொருட்களை எச்சரிக்கையுடன் கையாள்கிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் கதிர்வீச்சை வெளியிடும் பொருள் ஒன்று திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"கடுகு" சைஸ் சின்ன கேப்சூல் மாயம்.. உச்சக்கட்ட அலர்ட்டில் போலீஸ்.. அலறும் ஆஸ்திரேலியா! என்ன நடந்தது

மாயம்

மாயம்

மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு சுரங்கத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட போது, இந்த ரேடியோ ஆக்டிவ் பொருள் மாயமாகியுள்ளது. இந்த ரேடியோ ஆக்டிவ் பொருளால் கதிர்வீச்சு காயங்கள் முதல் பெரிய நோய் கூட ஏற்படுமாம் அபாயம் இருந்தது. இதனால் அங்கு மேற்கு ஆஸ்திரேலியா முழுக்க உச்சபட்ச அலர்ட் நிலை பிறப்பிக்கப்பட்டது. பல ஆயிரம் கிலோமீட்டருக்கு முழு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அங்கிருந்த மக்களுக்கும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 சின்ன கேப்சூல்

சின்ன கேப்சூல்

இப்படி ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் அலறவிட்ட அந்த பொருளின் சைஸ் நீங்கள் நினைப்பதைப் போல பெரியதாக எல்லாம் இல்லை. அந்த கேப்சூல் அளவு ரொம்பவே சிறியது. 8 மிமீ நீளமும் 6 மிமீ அகலம் கொண்ட அந்த சிறிய கேப்சூல் தான் ஆஸ்திரேலியாவையே அலறவிட்டது. சுரங்கத்தில் இருந்து எடுத்துச் சென்ற போது, லாரியின் பின்பக்கம் ஓபன் ஆகி, அங்கிருந்து இது எதிர்பாராதா விதமாகக் கீழே விழுந்துள்ளது. கிம்பர்லி பிராந்தியத்தில் தான் இந்த ரேடியோ ஆக்டிவ் சீசியம்-137 கேப்சூல் தொலைந்து போயுள்ளது.

 தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இந்த கேப்சூல் சுரங்க பணிகளுக்கு பொதுவாகச் சுரங்க பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்... இதனால் கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஜனவரி 12ஆம் தேதி இந்த கேப்சூல் மாயமான நிலையில், அதைக் கடந்த வாரம் தான் அதிகாரிகள் உணர்ந்தனர். அதன் பின்னரே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்த கேப்சூல் அங்குள்ள ரியோ டின்டோ சுரங்கத்திற்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

 ட்விஸ்ட்

ட்விஸ்ட்

இது ரேடியோ ஆக்டிவ் கேப்சூல் என்பதைப் பலராலும் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியாது. இதனால் அவர்கள் அதை சும்மா எடுத்தாலும் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதாலேயே உச்சக்கட்ட அலர்ட் நிலை பிறப்பிக்கப்பட்டது. ஒரு வாரக் காலம் சுமார் 5 அரசுத் துறைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த கேப்சூலை தேடினர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இந்த கேப்சூல் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அது எங்கும் செல்லவில்லை.. சாலையில் இருந்து இரண்டு மீட்டர் தூரத்திலேயே அதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த கேப்சூலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 பாராட்டு

பாராட்டு

இதற்கு ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இது சிறிய ரேடியோ ஆக்டிவ் கேப்சூல் தான் என்றாலும் கூட இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. பெரிய வைக்கோல் குவியலில் ஊசி தேடுவதைப் போல இருந்த இந்த பெரிய வேலையை அதிகாரிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர். இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன்" என்றார். இந்த கேப்சூலால் இதுவரை யாருக்கும் எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை யாரும் சொல்லவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 உரிய விசாரணை

உரிய விசாரணை

இதனிடையே இது குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. இது குறித்து மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை சுகாதார அதிகாரி ஆண்ட்ரூ ராபர்ட்சன் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றும் தேடுதலுக்குச் செலவான தொகையை அளிக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது.

English summary
Australia found the Radioactive Capsule which lost while transport: Australia Radioactive Capsule latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X