Just In
யாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்
சிட்னி: யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயரும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரனின் தந்தையுமானா ராஜா விசுவநாதன் காலமானார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும் பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 94வது வயதில் காலமானார். 1979 முதல் 1983 வரை யாழ்ப்பாணத்தின் மாநகர மேயராகவும் பணியாற்றியவர் ராஜா விசுவநாதன்.

தமிழர்களின் உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்ததுடன் பல்வேறு சமூகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டவர் ராஜா விசுவநாதன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையார் ராஜா விசுவநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.