சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டு நீச்சல்குளம்.. ஒய்யாரமாய் நீந்திய கொடிய விஷமுள்ள பாம்பு.. ஷாக்கான உரிமையாளர்!

ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்ற பழமொழியை கேட்டிறாதவர் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பாம்புகள் மீதான பயம் மக்களிடையே உள்ளது. அனைத்து பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை அல்ல. இருப்பினும் அதன் மீதான பயம் என்பது மற்ற விலங்குகளை விட அதிகம்.

One of Worlds Most Venomous Snakes found in a family swimming Pool in Autralia

புற்றுநோய், இதய நோய் அல்லது ஒரு வாகன விபத்து ஆகியவற்றால் இறப்பதை ஒப்பிடும்போது பாம்புக் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும் பாம்புகள் மீதான பயம் பலருக்கு இருப்பது மிகவும் உண்மையானது. அதனால் தான் பாம்பை கண்ட உடன் அடித்து கொல்ல பலரும் முயற்சிக்கிறார்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் அடிலேய்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் உலகின் அதிக விஷ தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்றான கிழக்கு பழும்பு நிற பாம்பு இருந்தது. நல்லவேளையாக அந்த வீட்டின் உரிமையாளர்கள் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பே அந்த பாம்பை பார்த்துவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் அடிலேய்டில் உள்ள பாம்பு பிடிக்கும் நிபுணர் குழுவை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்துக் கொண்டுபோய் வனப்பகுதியில் விட்டனர்.

உலகின் அதிக விஷ தன்மை கொண்ட பாம்புகளில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவில் தான் வாழ்கின்றன. இதனால் அந்நாட்டில் பாம்பு கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A family in Australia received an unpleasant surprise on spotting one of the world's deadliest snakes in their swimming pool. The eastern brown snake was found taking a dip to cool down in the suburb of Marino in Adelaide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X