சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில்.. 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு.. ஃபைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி அளித்துள்ளார்.

உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

இந்தியா பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மற்ற
நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டுள்ளது. அங்கு இதுவரை 32,400 பாதிப்புகளும், 915 உயிரிழப்புகளும் மட்டுமே எற்பட்டு இருக்கின்றன.

 ஆஸ்திரேலியா பின்னடைவு

ஆஸ்திரேலியா பின்னடைவு

அதே வேளையில் தடுப்பூசி செலுத்துதில் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்துள்ளது. மிக மெதுவாகவே தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 15% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மெதுவான தடுப்பூசி திட்டத்திற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டார். 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

 ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி

ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு அந்த நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியாவில் ஃபைசர் தடுப்பூசி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தபட்டு வந்த நிலையில் இப்போது குழந்தைகளுக்கும் ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

 முன்னுரிமை

முன்னுரிமை

தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்பு எந்தக் குழந்தைகளின் குழுக்களுக்கு தடுப்பூசி செலுத்ததில் முன்னுரிமை அளிக்க வேண்டும், எப்போது அதை நிர்வகிக்க வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி குழு ஆலோசனை வழங்கும் என்று அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் இன்று தெரிவித்தார்.

 இந்தியாவில் எப்போது?

இந்தியாவில் எப்போது?

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் உலக நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை காட்டி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Pfizer vaccine is approved for use in Australia between the ages of 12 and 15 childrens. Australian Prime Minister Scott Morrison has promised that everyone will be vaccinated by 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X