சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணியதால் ஆணுறுப்பு விறைப்பு இல்லை - மாணவர் வழக்கு

Google Oneindia Tamil News

சிட்னி: படிக்கும் போது மன அழுத்தம் ஏற்படுவது இயற்கைதான். அதுவும் பிஎச்டி படிக்கும் போது பெண்களுக்கு வேறு விதமான அழுத்தங்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் ஆணுறுப்பு விறைப்பு த்தன்மை ஏற்படாமல் போவதற்கு பல்கலைக்கழகம் கொடுத்த டார்ச்சர்தான் எனவும் அதற்கு நஷ்ட ஈடாக அந்த பல்கலைக்கழகம் 30 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்.

குல்தீப்மான்,52 என்ற அந்த நபர் கடந்த 2015ஆம் ஆண்டு மெல்பர்னில் தங்கிக் கொண்டு குயின்ஸ்லாந்தின் ஜேம்ஸ்குக் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க சேர்ந்தார். படிப்புகாக பல கஷ்டங்களை அனுபவித்தாராம். படித்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ ஒரு குற்றச்சாட்டை கூறி மாணவரை நீக்கியது பல்கலைக்கழகம்.

அவர் படிக்கும் போது மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அதனால் உறங்காமல் தவித்ததாகவும் கூறும் குல்தீப் மான், தனது ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இழந்து விட்டதாகவும் கூறி தற்போது வழக்குப் போட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் படிப்பு

ஆஸ்திரேலியாவில் படிப்பு

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்தின் ஜேம்ஸ்குக் பல்கலைக்கழகம் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக பல மாணவர்கள் அங்கு சென்று படித்துள்ளனர். பணிகளிலும் சேர்ந்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் பிஎச்டி படிக்க 20ஆயிரம் டாலர் பணம் கட்டி சேர்ந்தார் குல்தீப் மான்.

மென்ட்டல் டார்ச்சர்

மென்ட்டல் டார்ச்சர்

இரவு பகலாக படித்து எழுதியும் அங்கீகாரம் இல்லை. மனதளவில் டார்ச்சர் அனுபவித்தேன் என்று கூறும் குல்தீப்மான், இதனால் தனது பார்ட்னருடன் மகிழ்ச்சியான உறவில் ஈடுபட முடியவில்லை என்று கூறியுள்ளார். தன்னுடைய ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இல்லாமல் போனதற்குக் காரணம் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட டார்ச்சர்தான் என்று கூறியுள்ளார்.

நஷ்ட ஈடு கொடுங்க

நஷ்ட ஈடு கொடுங்க

மன ரீதியாக எனக்கு ஆணுறுப்பு எழாமல் போவதால் தனது வாழ்க்கையே போய்விட்டது என்று கூறும் குல்தீப்,பல்கலைக்கழகம் தனக்கு 30 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலியல் பிரச்சினை

பாலியல் பிரச்சினை


52 வயதில் ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கப் போய் படிப்பையும் பாதியில் விட்டு விட்டு இப்போது ஆணுறுப்பும் எழவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் வைரலாகி வருகிறது.

English summary
A student is suing a Queensland university for $3.125 million over loss of Erection Problem and career because he was failed on his admission attempt to study a PhD.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X