சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த திருட்டு நமக்கும் ஒரு பாடம்.. இல்லன்னா வெங்காயம் மாதிரி இதுக்கும் பீல் பண்ண வேண்டியிருக்கும்!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு விவசாயியிடம் இருந்து சுமார் மூன்று லட்சம் லிட்டம் தண்ணீர் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை நெருங்கிவிட்டதால், அங்கு வெப்பத்தின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

water thieves are more common in australia

இதனால் பல ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பஞ்சமும் நிலவுகிறது. இதனால் அங்கு தண்ணீர் திருட்டு அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமீபத்தில் அதிக அளவு தண்ணீர் திருடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் ஈவன்ஸ் பிளேயின் எனும் கிராமத்தில் விவசாயி ஒருவர், பெரிய டேங்குகளில் தண்ணீர் சேகரித்து வைத்திருந்தார்.

வாழ வீடில்லை.. சாப்பாட்டுக்கு வழியில்லை.. பக்காவா ப்ளான் பண்ணி ஜெயிலுக்கு போன முன்னாள் விஞ்ஞானி!வாழ வீடில்லை.. சாப்பாட்டுக்கு வழியில்லை.. பக்காவா ப்ளான் பண்ணி ஜெயிலுக்கு போன முன்னாள் விஞ்ஞானி!

இதனை நோட்மிட்ட தண்ணீர் திருடர்கள் டேங்கில் ஓட்டை போட்டு சுமார் மூன்று லட்சம் லிட்டர் வரை தண்ணீர் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நம்மூரில் வெங்காயத் திருடர்கள் அதிகமாகி விட்டது போல் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் திருடர்கள் உள்ளனர். அங்கு விரைவில் தண்ணீரைப் பாதுகாக்க கூடிய பாதுகாவலர்கள் நியமித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற சூழல் தான் நிலவுகிறது.

water thieves are more common in australia
English summary
In Australia 80,000 gallons of water stolen from a farmer's storage space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X