ரெண்டு குழந்தைங்க இருக்கே.. என்ன பண்ணுவேன்? உடைந்து அழுத ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மனைவி.. கலக்கமான பின்னணி
சிட்னி: மறைந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து அவரின் மனைவி லாரா தனது கணவர் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார். டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார்.
210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் செல்லும் போது விபத்துக்கு உள்ளானது. இவரின் கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பல முறை உருண்டு, புரண்டு விபத்துக்கு உள்ளானது. உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 46 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
இந்த நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மனைவி லாரா தனது கணவர் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார். கிரிக்கெட் டைம்ஸ் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் குழந்தைகளை இனி எப்படி பார்த்துக்கொள்வது என்றுதான் எனக்கு தெரியவில்லை. என் குழந்தைகள் மீது அவர் மிகவும் அன்பாக இருந்தார். சிறந்த தகப்பனாக இருந்தார்.

பெரிய ஆள்
அவர் பெரிய ஆளாக இருந்தாலும், அனைவருக்கும் நேரம் ஒதுக்கினார். அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. எங்களின் இரண்டு குழந்தைகளும் என்ன செய்ய போகிறது என்பதை நினைத்தாலே பதட்டமாக இருக்கிறது. அவர் எதை நினைத்தும் கவலைப்பட்டது இல்லை.

நல்லவர்
அவர் அனைத்தையும் ஈசியாக எடுத்துக்கொள்ள கூடியவர். அவருக்கு சரியாக போன் பயன்படுத்த தெரியாது. பழைய ஆட்கள் போல, அமர்ந்து அருகில் இருப்பவரிடம் பேசுவார். அவர் தான் கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை என்று கவலை இருந்தது. சரியான கல்வி தனக்கு கிடைக்கவில்லை என்று கவலை இருந்தது. அது மட்டுமே அவருக்கு கவலையாக இருந்தது. இருந்தாலும் அவர் மிகவும் புத்திசாலியான நபராக இருந்தார்.

உருக்கம்
தன்னை பற்றியும், தன்னுடைய திறமைகள் பற்றியும் அவர் அதிகம் கவனிக்க கூடியவர். அவர் நன்றாக பேச கூடியவர். நன்றாக பழக கூடியவர். அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பார்க்க கூடியவர் அல்ல. எல்லோரிடமும் நட்பாக பழகினார். அவரின் மறைவு பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. எங்களை அவரின் மரணம் உடைத்து போட்டுள்ளது என்று மிகவும் உருக்கமாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மனைவி லாரா குறிப்பிட்டுள்ளார்.