சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்க்கப் பார்க்க அழுகை வருகிறது.. பற்றி எரியும் ஆஸி. காடுகள்.. கருகி அழியும் விலங்கினங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    சிட்னி: லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அழிந்து போய் விட்டன.. கோடிக்கணக்கான விலங்குகள் கருகிப் போய் விட்டன. கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் வனங்கள்.. பற்றி எரியும் ஆஸ்திரேலியக் காட்டுத் தீயால் உலகமே பெரும் சோகத்துடன் பார்த்துக் கொண்டுள்ளது.

    செத்து மடிந்த விலங்குகளின் உடல்களைப் பார்க்கும்போது மனதை பிசைகிறது. அதை விட மீட்கப்படும் உயிரினங்களின் கண்ணில் காணப்படும் மிரட்சியும், தங்களை மீட்டோரிடம் அவை விடாப்படியாக இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் கண்ணீர் விட வைக்கின்றன.

    வரலாறு காணாத காட்டுத் தீயில் சிக்கித் தவிக்கிறது ஆஸ்திரேலியா. புவி வெப்பமயமாதல்தான் இந்த கொடூர காட்டுத் தீக்கு காரணமே. அதாவது மனிதர்கள் செய்த தவறால் இன்று அப்பாவி விலங்குகளும், வனங்களும் அநியாயமாக அழிந்து கொண்டுள்ளன. அமேசான் காட்டுத் தீயின் கொடூரம் அடங்குவதற்குள்ளாக தற்போது ஆஸ்திரேலிய வனங்கள் பற்றி எரிகின்றன.

    ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதலால் பரபரப்பு ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதலால் பரபரப்பு

    கோடிக்கணக்கில் விலங்குகள் பலி

    இந்தக் காட்டுத் தீயில் சிக்கி 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அழிந்து போய் விட்டன. கோடிக்கணக்கா விலங்குகள் கருகிப் போய் விட்டன. மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கோடை காலம் மிகக் கடுமையாக இருந்தது. அதிகரித்த வெப்ப நிலையே இந்த காட்டுத் தீக்கு காரணம். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியல் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.

    48 கோடி விலங்குகள் பலி

    இந்த காட்டுத் தீ காரணமாக ஆஸ்திரேலிய வன விலங்குகளின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. கிட்டத்தட்ட 8000 கோலா கரடிகள் அநியாயமாக இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 48 கோடி பறவைகள், விலங்குகள், பாலூட்டிகள் என மிகப் பெரிய உயிரிழப்பை சந்தித்துள்ளது விலங்குகள் உலகம்.

    மீட்புப் பணிகள் தீவிரம்

    பல பகுதிகளில் மீட்கப்படும் உயிரினங்கள் மனிதர்களைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் காட்சிகள் நெஞ்சைப் பிசைவதாக உள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

    வலியால் அரற்றும் கரடி

    ஒரு பெண் தீயில் சிக்கிய கரடியை மீட்டு தண்ணீர் கொடுத்து அதன் உஷ்ணத்தை தணிய வைக்கிறார். அது துடிக்கும், வலியால் அரற்றும் காட்சி மனதை அழுத்துகிறது.

    என்ன கொடுமை

    தீயிலிருந்து மீட்கப்பட்ட கரடிகள், கங்காருகள்.. நாம் செய்த தவறுகளுக்கு இந்த அப்பாவி விலங்கினங்கள் பலியாவதற்கு என்ன ஆறுதல் கூறி அவற்றைத் தேற்ற முடியும்!

    குளிர்ச்சியைத் தேடி ஓடிய பறவைகள்

    தீவிபத்திலிருந்து தப்பி குளிர்ச்சி நிறைந்த பகுதியை நோக்கி ஆயிரக்கணக்கான பறவைகள் பறந்தோடிய காட்சி இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் தீயில் சிக்கிய கருகி உயிரிழந்த உயிரினங்களின் படங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது.

    என்னவென்று சொல்வது

    இந்த அணைப்பை, பரிதவிப்பை, சோகத்தை விவரித்துச் சொல்ல வார்த்தையே இல்லை.. மனிதர்களே இனியாவது திருந்துவோமா.. !

    English summary
    The worst bushfire in Australia has killed 48 crore animals so far, say sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X