For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேளாண்துறையில் கொடி நாட்டிய முதல்வர் பழனிசாமி.. வியத்தகு சாதனைகள் செய்த அதிமுக அரசு!

2011 முதல் 2018 வரை வேளாண்மைத் துறையின் தமிழக அதிமுக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது.

சென்னை: 2011 முதல் 2019 வரை வேளாண்மைத் துறையின் தமிழக அதிமுக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது. அதில் முக்கியமான சாதனைகள் இதில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

வேளாண் உற்பத்தியினை இருமடங்காகவும், விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காகவும் உயர்த்திட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பல்வேறு புதிய கொள்கைகளை வகுத்ததோடு, நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றும் வகையில் சீரிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார்கள்.

Tamilnadu CM Palanisamys government did massive achievements in Agri field

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் வேளாண் பெருமக்களின் நலனுக்காகவும் வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் அவர்கள் வழியில் செயல்படும் முதல்வர் பழனிசாமி அவர்களின் அரசும் செயல்படுத்திய முக்கிய திட்டச் சாதனை விபரம் பின்வருமாறு:

1) வேளாண் பெருமக்களின் சாகுபடி செலவினை குறைப்பதற்காக, உரங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு 4 சதவிகித மதிப்பு கூட்டப்பட்ட வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

2) விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி, மற்றும் பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட டான்பெட் நிறுவனத்திற்கு இதுவரை 854 கோடியே 38 இலட்சம் ரூபாய் வட்டியில்லா முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.

3) அனைத்து வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் அனைத்து வருவாய் கிராமங்களில் 78 கோடி 33 இலட்சம் ரூபாய் செலவில் உழவர் பெருவிழா

4) சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர்ப் பாசன முறையினை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியம் . சிறு/குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் என்ற உச்ச வரம்பு நீக்கம் நுண்ணீர்ப் பாசன அமைப்புகளுக்காக சரக்கு மற்றும் சேவை வரியினை அரசு ஏற்பு.

2011-12 முதல் 2018-19 வரை 3.37 லட்சம் எக்டரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் 1,865 கோடியே 55 இலட்சம் ரூபாய் மானியத்தில் நிறுவப்பட்டு, 3,49,400 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, சென்ற 2018-19 ஆம் ஆண்டில் மட்டும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக, இதுவரை இல்லாத சாதனையாக, 1.42 லட்சம் எக்டரில் 700 கோடியே 69 இலட்சம் ரூபாய் மானியத்தில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டு, 1,39,693 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

5) டெல்டா விவசாயிகளின் நலனுக்காக குறுவை மற்றும் சம்பா சாகுபடித் தொகுப்புத்திட்டம்

2012-13 - குறுவைப் பருவத்தில் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.137.98 கோடியில் சம்பா தொகுப்புத்திட்டம்
2013-14 - 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.18 கோடியில் குறுவை தொகுப்புத்திட்டம்
2014-15 - 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.32.95 கோடியில் குறுவை தொகுப்புத்திட்டம்
2015-16 - 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.40.98 கோடியில் குறுவை தொகுப்புத்திட்டம்
2016-17 - 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.54.65 கோடியில் குறுவை தொகுப்புத்திட்டம்
2017-18 - 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.56.92 கோடியில் குறுவை தொகுப்புத்திட்டம்
2018-19 - 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் + ரூ.115.67 கோடியில் குறுவை தொகுப்புத்திட்டம்

6) நெல்லில் உயர்மகசூல் பெறுவதற்காக இயந்திர நெல் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு மானியம்

7)கரும்பு உற்பத்தியினை இரு மடங்காக உயர்த்திட, அரசு நீடித்த நவீன கரும்பு சாகுபடித் திட்டத்தின் கீழ், 2011 2012 ஆம் ஆண்டில் 1000 நிழல்வலைக் கூடங்கள் அமைக்க 5 கோடி ரூபாய் நிதியும், 2013-2014 ஆம் ஆண்டில் 400 நிழல்வலைக் கூடங்கள் அமைக்க 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியும், ஆக மொத்தம் 1400 நிழல் வலைக்கூடங்கள் அமைக்க 7 கோடியே 40 இலட்சம் ரூபாய் மானியம். கரும்புப் பயிரில் அதிக சர்க்கரைத்திறன் கொண்ட புதிய கரும்பு இரகம் கோ 11015 பிரபலப்படுத்த நடவடிக்கை .

8) மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக, 2016-17 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் 25 இலட்சம் ஏக்கர் பரப்பில் உள்ள மானாவாரி நிலங்களை மேம்படுத்தும் வகையில், "நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான திட்டம்" 803 கோடி ரூபாய் செலவில் செயலாக்கம்.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை

  • 4,154 விவசாயிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு, 3.65 லட்சம் விவசாயிகளுக்கு பயிற்சி.

    கிடைக்கும் மழை நீரினை திறம்பட சேமிப்பதற்காக, 3,191 புதிய பண்ணைக் குட்டைகள், 962 புதிய தடுப்பணைகள், 81 புதிய சமுதாய/கிராம குளங்கள் ஆகியவற்றை அமைத்தல்; 218 ஊரணிகள் தூர்வாரி ஆழப்படுத்துதல்; 1.37 லட்சம் ஏக்கர் பரப்பில் வயல் வரப்புகள் அமைத்தல்.

  • 25 இலட்சம் ஏக்கர் பரப்பில் உழவுப்பணிகள்
  • 19.7 இலட்சம் ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள தரமான விதைகள் விநியோகம்.
  • பண்ணை இயந்திர பயன்பாட்டினை விவசாயிகளிடையே பரவலாக்க, கிராம அளவில் 577 பண்ணை இயந்திர வாடகை மையங்கள்.
  • விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சுத்திகரிப்பு இயந்திரங்கள், பயறு உடைக்கும் இயந்திரங்கள், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் உட்பட 143
    மதிப்புக்கூட்டும் மையங்கள்.
  • மானாவாரிப் பகுதிகளில் உள்ள கால்நடைகளின் நலனுக்காக, நுண்ணுாட்டக்கலவை மற்றும் இனவிருத்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் 60 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றம்.
  • நடப்பாண்டில் 2.5 கோடி பனை மரவிதைகளும், விலை மதிப்புள்ள மரங்களை வளர்ப்பதற்காக, தேக்கு, மகாகனி, போன்ற மரக்கன்றுகளும் இலவசமாக விநியோகம்.
  • இத்திட்டத்தின் மூலம் இதுவரை 9.45 லட்சம் மானாவாரி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • 9) சிறு குறு விவசாயிகளை ஊக்குவித்து கூட்டாக சாகுபடிப்பணியினை மேற்கொள்ள "கூட்டுபண்ணைய திட்டம்" 2017-18 ஆம் ஆண்டில் அறிமுகம். இத்திட்டத்தின் கீழ்,

    • கடந்த இரண்டாண்டுகளில், 20,000 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து 4,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் உருவாக்கம்.
    • ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் மூலதன நிதியாக, 5 இலட்சம் ரூபாய்.
    • அரசு வழங்கிய இந்நிதியினை பயன்படுத்தி 16,000க்கும் மேற்பட்ட பண்ணை இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
    • சாகுபடி மட்டுமல்லாது வேளாண் வணிகத்தையும் வர்த்தக ரீதியாக மேற்கொள்வதற்கு, இக்குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக மாற்ற அரசு நடவடிக்கை. இதுவரை, 75 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பு.
    • கடந்த இரண்டாண்டுகளில் 200 கோடி ரூபாய் நிதியில் 4 இலட்சம் சிறு / குறு விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

    10) ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்டும் வகையில் முன்மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் 22 கோடியே 7 இலட்சம் ரூபாய் நிதி செலவில் 2.490 பண்ணை குடும்பங்கள் பயனடையும் வகையில் 2,490 ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்புகள்

    11) இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் குழுக்களை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி, கண்டுணர் பயணம், சான்றளிப்புக் கட்டணம், பூச்சிக்கொல்லி நஞ்சு பகுப்பாய்வு, சிப்பமிடுதல், வர்த்தகப் பெயரிடுதல், மதிப்புக் கூட்டுதல், உட்கட்டமைப்பு, வர்த்தக குறியீடு, வர்த்தக கண்காட்சி போன்ற பணிகளுக்காக ஊக்கத் தொகையாக மூன்று ஆண்டு காலத்திற்கு எக்டருக்கு 31,000 ரூபாய் நிதி உதவி.

    12) மண்வளத்தை பாதுகாத்திட, 3,000 மெட்ரிக் டன் திட உயிர் உரங்களும், 6 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்களும் உற்பத்தி.

    13) விவசாயிகள் தங்கள் சாகுபடிப்பணியினை காலத்தே மேற்கொள்ளும் வகையில், அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம்.

    • 2011-12 முதல் 2018 -19 வரை, தனிப்பட்ட விவசாயிகளுக்கு 87,673 வேளாண் இயந்திரங்கள் 370 கோடியே 11 இலட்சம் ரூபாய் மானியத்தில் விநியோகம்.
    • விலை உயர்ந்த பண்ணை இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலனுக்காக, வட்டார அளவில் 1,510 வேளாண் இயந்திர வாடகை மையங்கள், கிராம அளவில் 738 வேளாண் இயந்திர வாடகை மையங்கள், கரும்பு சாகுபடிக்கென தேவைப்படும் இயந்திரங்களை வழங்குவதற்கு 11 வாடகை மையங்கள்

    14) பயிர்களுக்கு உயிர் நீர்ப்பாசனம் அளிக்க 100 கோடி ரூபாய் செலவில் 10,000 பண்ணைக் குட்டைகள்

    2018-19 ஆம் ஆண்டில் 1,938 பண்ணைக் குட்டைகளும், நடப்பு 2019-20 ஆம் ஆண்டில் இதுவரை, 2,663 பண்ணைக்குட்டைகளும் ஆக மொத்தம் 4,601 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    15) சூரிய சக்தியைக் கொண்டு, நீர் இறைக்கும் மோட்டார் பம்பு செட்டுகள், வேளாண் விளை பொருட்களை உலர்த்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசு, சூரிய சக்தியினால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 90 சதவிகித மானியம். சூரிய உலர்த்திக்கு 60 சதவிகித மானியம்.

    • 2013-14 முதல் 2018-19 வரை 191 கோடி ரூபாய் மானியத்தில் 4,826 சூரிய பம்பு செட்டுகள் மற்றும் 249 சூரிய கூடார
      உலர்த்திகள்.

    16) உணவுதானிய உற்பத்தியில் சாதனை - அரசின் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகளினால் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2018-19 முடிய எட்டு ஆண்டுகளில் இதுவரை 6 முறை உணவுதானிய உற்பத்தி 100 இலட்சம் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை

    17) தமிழ்நாட்டின் உற்பத்தி சாதனைகளை பாராட்டி 2011-12, 2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளில் உணவுதானியங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் போன்ற இனங்களில் மத்திய அரசிடமிருந்து 5 முறை கிருஷி கர்மான் விருதுகள்.

    18) திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு 5 இலட்சம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் பதக்கம்.

    19) சிகைக்காய், பருத்தி, இளநீர் ஆகிய பாரம்பரிய வேளாண்மைப் பொருட்கள் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்க சேவை.

    20) தரமான சான்று பெற்ற விதைகளை குறித்த காலத்தில் விநியோகிப்பதற்காக , 10.04.2015 அன்று தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை உருவாக்கம்.

    21) வேளாண் சார்ந்த அனைத்து ஆலோசனைகளையும் ஒரே இடத்தில் வழங்க ரூ.219 கோடி செலவில் 146 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்.

    22) இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி:

    அ) பாரதப்பிரதமர் பயிர்க்காப்பீட்டுத்திட்டம்

    ஆ) மாநில பேரிடர் நிவாரண நிதியின்கீழ் வழங்கப்பட்ட நிதி விபரம்.

    23) கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

    • விழுந்த மரங்களை வெட்டி அகற்ற 805 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 107 துகளாக்கும் கருவிகள்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ், குழி எடுத்து நடவு செய்ய ஆணை
    • விலையில்லா 35 லட்சம் தென்னங்கன்றுகள்
    • ஊடுபயிராக 50,240 எக்டரில் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் விநியோகிக்க 20 கோடி ரூபாய் மானியம்
    • 39,535 எக்டரில் நுண்ணீ ர்ப் பாசனம் அமைக்க 61 கோடியே 45 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு
    • தோட்டக்கலை பயிர்களை 24,542 எக்டரில் நடவு செய்ய 44 கோடியே 17 இலட்சம் ரூபாய் மானியம்
    • புயலினால் பாதிக்கப்பட்ட 96,000 சதுர மீட்டரில் நிழல்வலைக்கூடங்கள் மீண்டும் நிறுவுதல்

    25. அமெரிக்கன் படைப்புழுவின் ஏற்பட்ட பாதிப்பினை மாநில பேரிடர் நிவாரண நிதியின் வரையறையின் கொண்டு வர நடவடிக்கை எடுத்து, 2.93 லட்சம் விவசாயிகளுக்கு 186 கோடியே 25 இலட்சம் ரூபாய் உதவித் தொகை.

    26. தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாய பெருமக்களுக்கு வேளாண் தகவல்களை கொண்டு சேர்ப்பதற்காக உழவன் கைபேசி செயலி அறிமுகம். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவிறக்கம்.

    27. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சீரமைக்கப்பட்ட தோட்டக்கலை பூங்கா மற்றும் தோட்டங்கள் :

    • திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா,
    • கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, அண்ணா பூங்கா மற்றும் செட்டியார் பூங்கா,
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு தாவரவியல் பூங்கா,
    • ஐந்திணை மரபணுப் பூங்கா, இராமநாதபுரம் மாவட்டம் அச்சடிப்பிரம்பில் ஐந்திணை மரபணுப் பூங்கா
    • நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டாவில் 4 எக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட தேயிலை பூங்கா
    • தேவாலாவில் ஒரு வண்ணத்துப்பூச்சி தோட்டம் கொடைக்கானலில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ரோஜா தோட்டம் மற்றும் கொய்மலர் மாதிரி செயல்விளக்கப் பண்ணை
    • கன்னியாகுமரியில் சுற்றுச்சூழல் பூங்கா
    • கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் தோட்டக்கலைப் பயிற்சி மையம் மற்றும் கொய்மலர்களுக்கான மகத்துவ மையம்,
    • திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் காய்கறிகளுக்கான மகத்துவ மையம்

    28. தரமான பழமரக்கன்றுகள் மற்றும் காய்கறி விதை உற்பத்திக்காக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு:

    • வல்லத்திரக்கோட்டை, முள்ளுவாடி, ஆடுதுறை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் விச்சந்தாங்கலில் 9 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு,
    • 10 கோடி ரூபாய் நிதிச்செலவில் ஈரோடு, துாத்துக்குடி, பெரம்பலூர், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்க நடவடிக்கை
    • மாதவரம் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் 5 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் அலங்கார மற்றும் செயல்விளக்க தோட்டம்
    • மூன்று கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் மாதவரம் தோட்டக்கலை பயிற்சி மையம் தோட்டக்கலை மேலாண்மை நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
    • 11 கோடியே 24 இலட்சத்து 57 ஆயிரம் இனத்தூய்மையான நடவுச் செடிகள் அரசுத் தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம்.

    29. ஊட்டி மாவட்டம் நஞ்சநாட்டில் மலைக்காய்கறி பயிர்களுக்கான மகத்துவ மையம், திருச்சி மாவட்டத்திலும் பழங்களுக்கான மகத்துவ மையம் 11 கோடி ரூபாய் செலவில் அமைத்திட நடவடிக்கை.

    30. தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக மொத்தம் ஒரு கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் தோட்டக்கலை விரிவாக்க மற்றும் பயிற்சி மையம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 28.12.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X