For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு!

சென்னை: தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, அரசு அமைந்த பிறகு, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அடித்தட்டு மக்களும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு அங்கமாக ஆதி திராவிடர் நலனுக்கான திட்டங்கள் பார்க்கப்படுகிறது.

Tamilnadu governments Adi Dravidar and Tribal Welfare Department schemes

ஆதி திராவிடர்களுக்காக, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த ஒரு பார்வை இதோ:

  • 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
  • மேலும், ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்காக 19 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகளுக்கான 9 கூடுதல் பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
  • 2018ம் ஆண்டு, அக்டோபரில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சேலம் ஆத்தூர் நலப்பள்ளி விடுதி கட்டடம், மற்றும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்களுக்கான 9 விடுதிக் கட்டடங்கள், 7 நலப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசசாமி, திறந்து வைத்தார்.
  • கடந்த ஜூன் மாதம், காஞ்சிபுரம் மாவட்டம் பரமசிவம் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் என மொத்தம் ரூ.47.30 கோடி மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களுக்கான விடுதிக்கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் மற்றும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
  • முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர்கள், ஜெயலலிதா, எம்ஜிஆர் பல்வேறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.
  • தற்போது அரசு தொடர்ந்து முன்னெடுத்து வரும், பல்வேறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களை பார்க்கலாம் வாங்க:
  • மாவட்ட ஆட்சியர் விருப்பப்படி நிதி வழங்குதல், 7ம் வகுப்புக்கு, மாவட்ட அளவில் விருது, 10ம் வகுப்புக்கு மாவட்ட அளவில் விருது. இந்த திட்டத்தின்கீழ், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுக்கும் ஆதி திராவிட/பழங்குடியினர்/கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் பிரிவினரை சேர்ந்தவர்களில், ஒரு மாணவன், மற்றும் ஒரு மாணவிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • டாக்டர்.அம்பேத்கர் தேசிய மெரிட் ஸ்காலர்ஷிப், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, குடிநீர் வசதி, கல்விகற்ற பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், தேர்வு கட்டணம்/விண்ணப்ப கட்டணம்/பதிவு கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்தல், முதுகலை படிப்புக்கு மாணவிகளுக்கு சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது.
  • டிகிரி, முதுகலை, படிப்புகளில் சேரும் ஆதிதிராவிடர்கள்/ பழங்குடியினருக்கு பதிவு கட்டணம் / ஆதிதிராவிடர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மாணவிகளுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் விலக்கு, சேர்க்கை கட்டணம் மற்றும் கல்வி கட்டணம் விலக்கு.
  • இலவச கல்வி - பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்., பிற பட்டப்படிப்புகள் மற்றும் பி.ஜி.யின் மாணவிகளுக்கு சிறப்பு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் கிடையாது.
  • போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம், 'அன்க்ளீன்' தொழிலில் ஈடுபடுவோரின் குழந்தைகளுக்கான ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை திட்டம் போன்றவை வழங்கப்படுகின்றன.
  • வெளிநாட்டு உதவித்தொகை - வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடி மாணவர்களுக்கு உதவித்தொகை.
  • ஊக்கத் தொகை / பரிசு வழங்கல் - மாநில நிலை (அ) பிளஸ் 2 பொதுத் தேர்வு ரூ.25,000 / - (ஆ) 10 வது பொதுத் தேர்வு ரூ.10,000 / -, தனிப்பட்ட தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பழமையான பழங்குடியினருக்கு காப்பீட்டு திட்டம் (ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டம்) செயல்படுத்தப்படுகிறது.
  • கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கல் - ஐடிஐ முடித்தவர்களுக்கு, தையல் இயந்திரங்கள் / தச்சு பொருட்கள். (சலவை செய்வதை ஒரு தொழிலாக மேற்கொண்டவர்களுக்கு ஐயர்ன் பாக்ஸ் வழங்கப்படும்)

வேலை சார்ந்த பயிற்சி - 2.2 தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து, நில மேம்பாட்டு திட்டம், நிலம் வாங்கும் திட்டம், இணைப்பு சாலை - பிரதான சாலைகள் / கிராமங்களுடன் ஆதிதிராவிடர் / பழங்குடியினரின் வசிப்பிடத்தை இணைக்கும் இணைப்பு சாலை வசதிகள் வழங்கப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X