For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரத்தில் பிடிபட்ட 1000 பாம்புகள்... : பாம்புகளைப் பற்றிய சில உண்மைகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: எந்தப் பாம்பும் மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கொத்துவதில்லை. மனித வாசம் கண்டாலே பயந்து ஓடி, மறைந்துகொள்ளும் கூச்ச சுபாவமுள்ள உயிரினம் பாம்பு. தவிர்க்க முடியாத நிலையில்தான் பாம்பு நம்மைக் கடிக்கிறது. அதுவும்கூடத் தற்காப்புக்காகத்தான். கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் பாம்புக் கடியால் 99 சதவீதம் பேர் இறக்கிறார்கள் என்று பாம்பு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் ஆயிரம் பாம்புகள் பிடிபட்டன. நல்லபாம்பு, சாரைபாம்பு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் மகுடி ஊதி பிடிக்கப்பட்டன.

கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பு, சாரைப்பாம்பு என கூட்டம் கூட்டமாக பாம்புகள் பிடிபட்டுள்ளன. பாம்புகள் என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒரே இடத்தில் ஆயிரம் பாம்புகள் பிடிபட்டதைப் பார்த்த மக்கள் நடுநடுங்கித்தான் போனார்கள். பாம்புகளைப் பற்றி நிறைய மூட நம்பிக்கைகளும் அதீத அச்சமும் நிலவுகின்றன.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

பாம்புகளை கண்டு அச்சம் கொல்லத் தேவையில்லை என்பது பாம்பு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. ஜவ்வாது மலை கிராமங்களில், பாம்பு கடிக்கு மாதம், பத்து பேர் , இறக்கின்றனர். விஷ பூரான், தேள், பூச்சி கடித்து மாதம், 1,000 பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பாம்புகள் பயந்தவை

பாம்புகள் பயந்தவை

எந்தப் பாம்பும் மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கொத்துவதில்லை. மனித வாசம் கண்டாலே பயந்து ஓடி, மறைந்துகொள்ளும் கூச்ச சுபாவமுள்ள உயிரினம் பாம்பு. அது செல்லும் பாதையில், நாம் தவறுதலாக மிதித்துவிட்டால் நம்மைக் கொத்துகிறது அல்லது துரத்துகிறது. அதற்கு நாம் இம்சை கொடுக்காதவரை, நம்மை அவை இம்சிப்பதில்லை.

பாம்பு கடியால் மரணம்

பாம்பு கடியால் மரணம்

தவிர்க்க முடியாத நிலையில்தான் பாம்பு நம்மைக் கடிக்கிறது. அதுவும்கூடத் தற்காப்புக்காகத்தான். கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் பாம்புக் கடியால் 99 சதவீதம் பேர் இறக்கிறார்கள்.

10000 மரணங்கள்

10000 மரணங்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் இறக்கிறார்கள். உலகிலேயே பாம்புக் கடியால் அதிகம் பேர் இறப்பது இந்தியாவில்தான். ஆனால், உலகில் அதிக விஷப் பாம்புகள் உள்ள நாடு ஆஸ்திரியா. அங்குப் பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வும், முதலுதவி அறிவும் மிக அதிகம். அங்கே வருடத்துக்கு 10க்கும் குறைவானவர்களே பாம்புக் கடியால் இறக்கிறார்கள்.

நான்கு வகை பாம்புகள்

நான்கு வகை பாம்புகள்

நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு பாம்புகளிடம் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பாம்பு, கட்டுவிரியன் கடித்தால் நரம்பு மண்டலமும், கண்ணாடிகளும் விரியன், சுருட்டை விரியன் திசுக்களும் பாதிப்படையும் என்கிறார் பாம்பு ஆராய்ச்சியாளர் செல்வராஜ்.

விவசாயிகளின் நண்பன்

விவசாயிகளின் நண்பன்

அடிபட்டு கிடக்கும் பாம்புகளைப் பார்த்து அவற்றிர்க்கு சிகிச்சை அளித்து குணமான உடன் காட்டில் கொண்டு போய் விடுகிறார். நூற்றுக்கணக்கான பாம்புகளை அவர் காப்பாற்றியுள்ளார். பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்றும் கூறுகிறார் ஆராய்சியாளர் செல்வராஜ்.

பாம்பு முக்கியம்

பாம்பு முக்கியம்

யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்; பாம்பு துரத்தினால் நேராக ஓட வேண்டும்' என்று நமது மூதாதையர்கள் வைத்திருந்த புரிதல் ரொம்ப முக்கியமானது. அதே போல விஷமுடைய பாம்புகள் இறந்தால் அவற்றை எரித்து விட வேண்டும் என்பதும் முன்னோர்கள் சொல்வது உண்மையானது என்கின்றனர் பாம்பு ஆராய்ச்சியாளர்கள்.

குரல் கொடுக்க வேண்டும்

குரல் கொடுக்க வேண்டும்

யானைகளைக் காப்பாற்றக் குரல் கொடுப்பது போல், காட்டில் வாழும் பாம்புகளைக் காப்பாற்ற இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுப்பதில்லை மனிதர்கள் இந்த மண்ணில் வாழ எந்த அளவுக்கு உரிமை உண்டோ, அதைவிட அதிக உரிமை கொண்டவை பாம்புகள். எனவே பாம்புகளையும் காக்கவேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

பாம்புகளுக்கு பால் முட்டை

பாம்புகளுக்கு பால் முட்டை

பாம்புகள் மீதான அச்சத்தினால் நிறைய கோவில்களில் புற்றுக்கு பால் ஊற்றியும், முட்டை வைத்தும் வழிபடுகின்றனர். ஆனால் பாம்புகள் பால், முட்டையை குடிப்பதில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாம்புகள் பழி வாங்குமா?

பாம்புகள் பழி வாங்குமா?

பொதுவாகவே பாம்புகள் பல ஆண்டுகள் கழித்து வந்து பழிவாங்கும் என்பது போல சீரியல், சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் பாம்புகளுக்கு பழிவாங்கும் குணம் எல்லாம் கிடையாது. இனிமேல் பாம்புகளைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதும் பாம்பு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Panic gripped the villagers of near maduranthakam in Kancheepuram district on Tuesday morning people were greeted by 1000 snakes that were catched in co oprative Sugar factory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X