For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்து 1 மாதமான மகளுக்கு இதய அறுவை சிகிச்சை: நிதியுதவி கேட்கும் தினக்கூலி

சென்னை: இதய நோயுடன் போராடும் ஒரு மாத குழந்தை வைஷ்ணவியை காப்பாற்ற உதவி கேட்டு பெற்றோர் கெஞ்சுகிறார்கள்.

சென்னையை சேர்ந்தவர் கார்த்திகேயன். அவர் மனைவி தற்கொடி. திருமணமான ஓராண்டில் தற்கொடி கர்ப்பமானார். ஆனால் தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதால் அந்த கருவை கலைக்க வேண்டியதாகிவிட்டது.

அதன் பிறகு தற்கொடிக்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இந்த காரணத்தை கூறி உறவினர்கள் அவரை கடுமையாக விமர்சிக்கத் துவங்கினார்கள். அந்த சமயத்தில் கர்ப்பமான தற்கொடி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தைக்கு வைஷ்ணவி என பெயர் வைத்தனர். பிறந்த இரண்டு நாட்களில் வைஷ்ணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மஞ்சள்காமாலை என்று கூறிய மருத்துவர்கள் அதற்கான சிகிச்சை அளித்தனர்.

குழந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் அதற்கு இதயத்தில் பிரச்சனை உள்ளதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

அறுவை சிகிச்சை, மருந்துகளுக்கு ரூ. 5 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்கட்ட சோதனை, மருந்துக்காக கார்த்திகேயன் தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளரிடம் வட்டிக்கு ரூ. 1 லட்சம் கடன் வாங்கினார்.

இந்நிலையில் ரூ. 5 லட்சத்திற்கு எங்கே செல்வது என்று தெரியாமல் உள்ளார். குழந்தை வைஷ்ணவியின் உயிரை காப்பாற்ற நன்கொடை அளிக்குமாறு கெஞ்சிக் கேட்கிறார் கார்த்திகேயன். மாதம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை சம்பாதிக்கும் தனக்கு ரூ. 5 லட்சம் என்பது முடியாத தொகை என்கிறார் அவர்.

வைஷ்ணவிக்கு உதவ விரும்புவோர் க்ளிக் செய்யவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X