For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாட்கள் போலீஸ் கஸ்டடி.. எழும்பூர் நீதிமன்றம் அனுமதி!

கொள்ளையன் நாதுராம் உட்பட 3 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியயுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொள்ளையன் நாதுராம் உட்பட 3 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியயுள்ளது.

கொளத்தூர் நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நாதுராமை பிடிக்க சென்ற போது மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை செய்யப்பட்டார்.

நாதுராமை பிடிக்க முயன்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அப்போத மிஸ்ஃபயராகி குண்டு பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது.

பெரியபாண்டியன் உயிரிழப்பு

பெரியபாண்டியன் உயிரிழப்பு

இதில் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாதுராம் அண்மையில் சென்னை கொண்டுவரப்பட்டார்.

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை

இந்நிலையில் கொள்ளையன் நாதுராம் உள்ளிட்ட 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

10 நாட்கள் கஸ்டடி

10 நாட்கள் கஸ்டடி

அப்போது போலீஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்று நாதுராம் கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பத்தாராமையும் 10 நாள் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் மனுத்தாக்கல்

ஜாமீன் மனுத்தாக்கல்

இதனிடையே ஜாமீன் கோரி நாதுராம் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நாதுராமின் கூட்டாளிகளான தினேஷ் சவுத்ரி, பத்தாராம் ஆகியோரும் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நாதுராம் தந்தைக்கு ஜாமீன்

நாதுராம் தந்தைக்கு ஜாமீன்

இந்த ஜாமின் மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நாதுராமின் தந்தை உட்பட 4 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

4 பேருக்கு ஜாமீன்

4 பேருக்கு ஜாமீன்

நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நாதுராமின் தந்தை சென்னாராம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாதுராமின் தந்தை சென்னாராம் உள்ளிட்ட 4 பேருக்கும் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

English summary
The Egmore court has given permission to investigate three persons, including thief Nathuram for 10 days police custody. Nathuram seeking bail he filed a bail petition in Chennai egmore court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X