For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானாமதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்த பக்தர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மானாமதுரை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக மானாமதுரை சித்திரை திருவிழா புகழ்பெற்றது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று வெகு சிறப்பாக நடந்தது

Devotees throng Meenakshi temple for celestial wedding

மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாத ஆலய சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.

மானாமதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 2ம் தேதி தொடங்கியது.

முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினர்.

அம்மன் சார்பாக சர்க்கரை பட்டரும், சுவாமி சார்பாக தெய்வசிகாமணி பட்டரும் மாலை மாற்றி கொண்டனர்.

காலை 11 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்தது. திருக்கல்யாண வைபவம் முடிவடைந்ததை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றி கொண்டனர். பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

திருக்கல்யாணம் குறித்து பக்தர் கமலா தினேஷ் கூறுகையில், மானாமதுரை சித்திரை திருவிழா வெகு சிறப்பானது. திருமணமாக பெண்கள் விழாவில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது ஐதீகம் என்றார்.

வைகை ஆற்றில் அழகர்

முக்கிய நிகழ்வான வைகையாற்றில் வீரஅழகர் இறங்கும் வைபவம் 14ம் தேதி புதன் கிழமை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வரதராஜன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

English summary
Thousands of Devotees thronged the famous Manamadurai temple in to witness the celestial wedding of Goddess Sri Ananadavalliammanwith lord Somanatha on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X