For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறப்பை எதிர்த்து போராடி வரும், சிறுமிக்கு உதவுங்களேன்!

சென்னை: இறப்பையே எதிர்த்து போராடி வரும் குழந்தை விஷாகாவுக்கு உதவுங்கள். உங்களை நாடி வந்துள்ளார்.

தன்னுடைய 10 வயதிலேயே உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து மரணத்தின் பிடியிலிருந்து தவித்து வருபவர் தான் விஷாகா. ஆர்வத்துடனும் ஆசையுடனும் மேற்கொண்டு வந்த அவரது கல்வி இப்பொழுது தூசியும் குப்பையுமாக மறைந்து கிடக்கிறது . தூக்கிச் சென்ற புத்தகங்கள் கூட விஷாகாவின் கை படாமல் சிதறி கிடக்கின்றன.

 10-year-old Vishaka Needs Your Support In Fighting Multiple Organ Failure

ஒரு நாள் கூட இந்த புத்தகங்களை தன் பையில் வைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு போகாமல் அவள் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது அந்த புத்தகங்கள் எல்லாம் அவளது கனவுகளை நினைவேற்ற அவளது வருகைக்காக எதிர்நோக்கி காத்து கிடக்கின்றன. எப்பொழுதும் கையில் புத்தகத்துடன் புன்னகைக்கும் அவளை என்னால் இப்பொழுது காண முடியவில்லை. அவளது வெறிச் சோடிய படுக்கையை கடந்து செல்லும் போது ஒவ்வொரு நாளும் கண்கள் கலங்கி விடுகின்றன.

ஒவ்வொரு நாளும் அவளது வருகைக்காக நாங்கள் காத்து இருக்கிறோம் என்ற நம்பிக்கை தான் இன்னமும் என்னை உயிருடன் வாழச் செய்து வருகிறது. விஷாகாவின் இளைய சகோதரன் அவள் இல்லாமல் சோர்ந்து விட்டான். ஒவ்வொரு நாளும் அக்கா எப்போ வருவாள் என்று அவன் கேட்கும் கேள்விகளுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்.

இப்பொழுது எல்லாம் அவன் தூங்கும் போது கூட அவன் அக்காவை நினைத்து தான் புலம்புவான். எப்பொழுதும் என்னுடன் அக்கா இருப்பாள் எனக்கு இருட்டுனா பயமா இருக்காது, அவளை கட்டிப் பிடித்து படுத்துக் கொள்வேன். இப்பொழுது நான் மட்டும் ஏன் தனியாக இருக்கிறேன் என்று அவன் கண்கள் கலங்கும் போது என்னால் ஒண்ணுமே செய்ய முடியாமல் தவிக்கிறேன். உன் அக்கா தன் மரணத்தை வெல்ல போராடி வருகிறாள் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத அந்த சின்னஞ் சிறு குழந்தையிடம் எப்படி சொல்லுவேன் என்று கதறுகிறார் விஷாகாவின் தந்தை.

 10-year-old Vishaka Needs Your Support In Fighting Multiple Organ Failure

ஒரு நாள் பள்ளியிலிருந்து இப்படி ஒரு அழைப்பு வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாள் விஷாகாவின் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியது. வேகமாக பள்ளியை நோக்கி ஓடிச் சென்ற அவர்களுக்கு படுத்த படுக்கையில் விஷாகா கிடைப்பதை பார்த்ததும் கண்ணீர் வந்து விட்டது. உடனே கால தாமதம் ஆகாமல் விஷாகவை மருத்துவ மனையில் சேர்த்தோம். வெளிரிய தோலுடன், மிகவும் சோர்வாக, கொதிக்கின்ற காய்ச்சலுடன் காணப்பட்டாள். ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். அதன் பாதிப்பு தான் விஷாகாவின் ஒரு உறுப்பை கூட விடவில்லை. அந்த பிஞ்சு குழந்தையின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் எல்லாம் பலவீனமாகி விட்டது என்று விஷாகாவின் தந்தை சஞ்சீவ் கூறுகிறார்.

மருத்துவமனையே அவளது நிரந்தர இடமாக மாறி விட்டது. எல்லா உடலுறுப்புகளும் செயலிழந்த நிலையில் படுத்த படுக்கையாகி விட்டாள். ஓடியாடி விளையாடிய குழந்தை இப்பொழுது மூச்சு விடக் கூட வென்டிலேட்டர் உதவி வைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அவளது சிகச்சைகாக அங்கே இங்கே என்று கடனை வாங்கி ஒரு ஐந்து லட்சம் வரை பணம் திரட்டி செலவழித்து வருகிறேன்.

விஷாகாவின் அப்பா வருமானம் மாதத்திற்கு வெறும் 7000 மட்டுமே, அவர் ஒரு RTO ஆபிஸில் முகவராக பணியாற்றி வருகிறார். இன்னும் விஷாகாவின் மருத்துவ செலவுக்கு என்று 7,00,000 ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக சஞ்சீவ் போராடி வருகிறார். அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கையாக நம்மிடம் உதவியை நாடி வந்துள்ளார்கள். தன்னுடைய செல்ல மகளை எப்படியாவது காப்பாற்றி விட முடியும் என்ற ஏக்கத்துடன் முயன்று வருகிறார்கள்.

இதை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள் இது. நாம் அனைவரும் மனிதர்கள் ஆவோம். தன் மகளை நினைத்து வருந்தி வரும் தந்தைக்கு அவரின் நிலையில் இருந்து உதவி செய்வோம். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டியது கடவுளின் கடமை மட்டும் அல்ல மனிதர்களாகிய நம் நேயமும் கூட என்பதை நாம் மறக்க கூடாது. நம் மகளின் உயிரை காக்க வேண்டும் என்று நாமும் போராட வேண்டும். நம் உணர்வும் நம் அன்பும் சரியான நேரத்தில் வெளிப்பட்டால் மட்டுமே மதிப்பிற்குரியதாகவும் அர்த்தமாகவும் மாறும். நம் சிறு மனிதநேயம் ஒரு உயிரை காக்க உதவப் போகிறது. உங்களுடைய உதவிக் கரங்கள் ஒருவரின் வாழ்க்கையை திருப்பி கொடுத்ததாக இருக்கட்டுமே.

 10-year-old Vishaka Needs Your Support In Fighting Multiple Organ Failure

ஒருவருடைய உயிரை காப்பாற்ற எந்த காரணங்களும் தேவையில்லை என்பதை நினைவில் வையுங்கள். உயிரை காப்பது மருத்துவர்களின் உதவி என்றால் நம்முடைய உதவி அதில் ஒரு வழியாக அமையட்டும். உங்களுடைய சிறிய பணம் அவளின் மருந்து மாத்திரைக்கு கூட உதவலாம். இது அவளுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு மட்டுமல்ல நம் மனிதாபிமானத்தை காட்டக் கூடிய வாய்ப்பும் இதே. தன்னுடைய 10

வயதிலேயே மரணத்தை சந்திக்க போராடும் அவளை மீட்டெடுக்க கை கொடுப்போம். ஒரு பெற்றோரின் உணர்வை புரிந்ததாக நம் உதவி சந்தோஷயத்தை தரட்டும். ஒரு குழந்தையின் மீளும் சிரிப்பு கண்டிப்பாக நம் உள்ளங்களையும் மகிழ்விக்க போகிறது.

வாங்க உயிர் காக்க உதவி செய்வோம், ஒன்றாக இணைந்து!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X