For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை புழல் சிறையில் நடந்த சிறப்பு லோக் அதாலத் மூலம் 100 கைதிகள் விடுதலை

சென்னை புழல் சிறையில் நடந்த சிறப்பு லோக் அதாலத் மூலம் 100 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : புழல் சிறையில் நடந்த சிறப்பு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 100 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

புழல் சிறையில் பல்வேறு வழக்களின் கீழ் கைதிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று லோக் அதாலத் முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாநவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

100 prisoners are released from Puzhal Prison after Lok Adalat

13 நீதிபதிகளை கொண்ட குழு நீதிமன்ற வழக்குகளை விசாரித்தனர். அதில்171 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு அதன் மூலம் 100 விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

லோக் அதாலத் என்பது சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
100 Prisoners who were for trial have released by Lok Adalat from Chennai Puzhal Prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X