For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருட்டுப் பசங்களுக்குப் பயந்து மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 100 பவுன் நகைகள் மாயம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: திருட்டுப் பயம் காரணமாக மண்ணுக்குள் பத்திரமாக நகைகளை ஒருவர் புதைத்து வைத்திருந்தார். அந்த நகையும் காணாமல் போனதால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

நாகர்கோவில் பொதுப் பணித்துறை சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். கோணம் அரசு பாலிடெக்னிக்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையம் வந்து தனது வீட்டில் வைத்திருந்த 100 பவுன் நகை மாயமாகி விட்டதாகவும், அதை போலீசார் மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறினார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

100 sovereign jewels looted in Nagarkovil

பின்னர் போலீசாரிடம் நாகராஜன் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு சொந்தமான 100 பவுன் நகைகளை வங்கி லாக்கரில் கடந்த 7 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து வந்தேன். வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்காது என நான் நினைத்ததால் அந்த நகைகளை ஒரு பையில் வைத்து கட்டி எனது வீட்டின் கீழே உள்ள குடோனில் மண்ணில் புதைத்து இருந்தேன்.

சம்பத்தன்று காலை பிளம்பிங் வேலைக்காக அந்த குடோனுக்கு சென்ற நான் அங்கு நகைகள் வைத்திருந்த பை திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைநதேன். அதில் இருந்த 100 பவுன் நகை மாயமாகி இருந்தது. அந்த நகைகளை யாரோ திருடிச் சென்றுள்ளனர். போலீசார் விசாரித்து அந்த நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நாகராஜனின் வீட்டுக்கு சென்று அவர் புகார் கூறிய குடோனை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அவரது மனைவி பாமாவிடமும் நகை மாயமானது பற்றி விசாரணை நடத்தினர்.

English summary
100 sovereign jewels have been mysteriously looted in Nagarkovil. The jewells were kept buried underground, it is noted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X